21. புத்தரின் கேள்வி புத்தரின் துறவு உலக வரலாற்றில் மிகச் சிறந்ததாகும். இந்தியாவில் அன்றுதொட்டு இன்றுவரை துறவிகளுக்குக் குறைவில்லை. காவியணிந்தவர்கள், கமண்டலமேந்தியவர் கள், காட்டில் வசிப்பவர்கள், கடுந்தவம் புரிபவர்கள் உலகில் வேறெங்கும் காணக்கிடைக்க முடியாத அளவுக்கு இந்த உபகண்டத்தில் இருந்திருக்கின்றனர். புத்தரைவிடக் கடுமை யான துறவிகள் இருந்திருக்கின்றனர். புத்தரைவிட இளம் வயதில் துறவியானவர்களும் உண்டு. ஆனால் மற்றவர்கள் துறவிகளாவதற்கும், சித்தார்த்தன் துறவியானதற்கும் பலத்த வேறுபாடு உண்டு. ஏழ்மையும் சோம்பலும் பலரைத் துறவிகளாக்கியிருக் கின்றன. வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், மனைவியிடம் சந்தேகம், பெண்களிடம் மோகம், மக்களிடம் உற்றார் உறவினரிடையே சண்டை ஆகியவை சிலரைக் காவியுடை பூணச் செய்திருக்கின்றன. உலகின்மீது வாழ்வின்மீது உண்டான வெறுப்பு சிலரைக் காட்டுக்கு அனுப்பியது. "வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்" என்ற வேதாந்தத்தை நம்பியவர்கள் துறவிகளாகியிருக்கின்றனர். இகலோக இன்பத்தை வெறுத்துப் பரலோக இன்பமே நிலை யானது என்று மோட்சம் வேண்டிப் பரமனைப் பாடிச் சென்ற துறவிகள் பலர். ஆனால் சித்தார்த்தர் துறவியாவதற்கு இந்தச் சூழ்நிலை கள், குறிக்கோள்கள் எதுவும் காரணமாக அமையவில்லை.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/150
Appearance