உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 அரண்மனையில், அவர் பிறந்தது இளவரசனாக ஏழ்மையின் கொடுமை என்றும் அந்த அரண்மனைக்கருகில் தலை காட்டியதில்லை. அரச வாழ்வு இன்பமயமாக, என்றும் மாறாத திருநாளாக, வற்றாத உல்லாசக் கூடமாக இருந்தது. மனைவியிடம் வெறுப்பு ஏற்பட்டதா? அல்ல. அல்ல! அழகு மனைவி யசோதரையை அளவற்ற காதலுடன் அவர் காதலித்தார். அவளைக் கண்ட நாளிலிருந்து, பின் மணந்த நாளிலிருந்து. அவர்களின் வாழ்வு காதல் மயமாகத்தான் இருத்தது. பேசும் விழியும், இசை வீசும் மொழியும், நீல வானும், நிலவின் பயனும், தென்றலும்,தேனும்,மலரும், காதல் மணமும், திகட்டாத விருந்தாக, வசந்தம் மாறாத இன்பமாக அவர்களுக்கு இருந்தது. அரண்மனையை விட்டு வெளியேறவேண்டுமென்று சித்தார்த்தர் நிச்சயித்த கடைசிக் இரவு: அன்றுகூட மனைவியின் முகத்தைப் பார்க்கும்பொழுது ளவரசனின் மனம் தத்தளித்ததாம்! பூத்த புதுமலராய், புன்னகையின் புகலிடமாய் விளங்கிடும் இளவரசனின் முகத்தில் கவலை தேங்கி இருப்பதைக் கண்ட யசோதரை கலங்கிக் கண்ணீர்விட்டுக் கேட்கிறாள்: "கண்ணாளா! என்ன நேர்ந்தது? என்னிடம் கூற மாட்டீரோ?" என்று. “கண்ணே! கவலையை விடு! உலகம் அசைந்தாலும் உயர்ந்தவைகள் வீழ்ந்தாலும், காலப்போக்கில் நம்மிடை மாறுதல்கள் பல நேர்ந்தாலும், கண்மணி! இதை மட்டும் உறுதி யாகத் தெரிந்துகொள். என் யசோதரையைக் காதலித்தேன், காதலித்தேன், காதலிக்கிறேன். அதில் எள்ளளவும் குறை கிடையாது!" என்று மனைவியின் கண்ணீரைத் துடைத்து இளவரசர் உறங்கவைக்கிறார். நடுநிசியில் அழகு மனைவி யையும், அருமைக் குழந்தையையும் விட்டுப் பிரியும்பொழுதும், அவர் கொண்ட காதலில் குறைகாணப்படவில்லை. வாழ்வில் அவருக்கு வெறுப்பு ஏற்படவில்லை. "வாழ் வாவது மாயம்" என்ற வறட்டு வேதாந்தம் அவரை காவி வேடதாரியாக்க வில்லை.