150 காதல் மனைவியை அவர் வெறுக்கவில்லை. கனிமொழி பேசும் மகனை அவர் வெறுக்கவில்லை. உற்றார் உறவினரையோ, ஊரையோ, உலகத்தையோ வெறுத்து அவர் வெளியேறிச் செல்லவில்லை. உலகின்மீது கொண்ட வெறுப் பாலல்ல அவர் அரசவாழ்வைத் துறந்து ஆண்டிக்கோலத்தின் ரானது! உலகின்மீது கொண்ட அன்பு, மக்கள்குலம் அனைத் தின்மீது கொண்ட அன்பு,அவரை வெளியேறச் செய்தது! 0 துறவியாகி, தவக்கோலத்திலிருப்பவன் கடவுளிடம் பெற விரும்புவது, "இறைவா! என் பிறவித்துன்பத்தை நீக்கிவிடு! உலக மாயத்திலிருந்து என்னை விடுவித்து, உன் பாத கமலத் தில் சேர்த்துக்கொள்! என் பாபத்தைப் போக்கிப் பரமபதத்தில் இடம் தா!" என்பவைகளாகும். தவத்தின் மூலம், துறவின் மூலம் இவைகள் கிடைக்கின்றனவர் என்பது ஒரு புறமிருக் கட்டும். அவைகள் கிடைப்பதாக வைத்துக்கொண்டாலும், துறவி பாடுபடுவதெல்லாம் தனக்காக - தனக்கு மோட்சம் கிடைக்க -தன் ஆத்மாவுக்கு நல்லகதி கிடைக்க வேண்டுமென் பதற்காக! ஆனால் புத்தர் துறவியாக வெளியேறியது தனக் காக அல்ல, உலகமக்கள் இன்பமாக வாழ்வதற்கு என்ன வழி என்பதாலாகும். உண்மையைக் காணவேண்டும், உலகு அமைதியுடன் வாழ ஒருவழி தேடவேண்டும் என்ற உயர்தர உள்ளப்பாங்குடன், சித்தார்த்தர் அரசவாழ்க்கையைவிட்டு வெளியேறினார். உண்மையைக் காணவேண்டும் என்பதற்கு விஞ்ஞானிகள் எவ்வளவு பாடுபடுகிறார்கள், அயராது உழைக்கிறார்கள், ஆபத்துக்களை அணைத்துக்கொள்கிறார்கள்! உண்மைகளைக் கண்டறிவதன் பலன் என்ன? உலகம் உயர்கிறது, வாழ்வு செழிப்படைகிறது. மக்களின் துன்பம் குறைந்து இன்பம் அதிக மாகிறது. அதேவித விஞ்ஞான மனப்பான்மையுடன், உண்மையைக் காணவேண்டும் என்ற மனவுறுதியுடன் சித்தார்த்தர் வெளியேறினார். சித்தார்த்தன் வெளியேறினான் அரண்மனையைவிட்டு, ஆளும் இளவரசைவிட்டு, அரச வாழ்வைவிட்டு, மதிமுக மனைவியைவிட்டு, மழலைபொழியும் மகவைவிட்டு! மகனின்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/152
Appearance