. 151 இளகிய மனங்கண்டு இன்பமன்றி துன்பமெதுவும் அரண் மனைக்குள் நுழையலாகாது என்று கண்ணை இமை காப்பது போல, துன்பத்திலிருந்து அவனைக் காத்துவந்த தந்தை நாட்டின் மன்னர் சுத்தோதனரைச் சோகத்தில் ஆழ்த்தி, பெற்ற தாயினும் பரிவுடன் சீராட்டித் தாலாட்டி வளர்த்த சிறிய தாய் பிரசாபதியைத் தவிக்கவிட்டு, அரசையும் நாட்டை யும் மணிமகுடத்தையும் அணிபணி அனைத்தையும் துறந்து வெளியேறினான். காலையில் கண் விழித்ததும் இளவரசரைக் காணாமல் மனைவி புலம்புவாள், தந்தை கலங்குவார். வளர்த்த தாய் கண்ணிர்விடுவாள், பிள்ளைக் கனியமுதாம் ராகுலன் கதறுவான், அவ்வளவும் ஊரைவிட்டு இரவோ டிரவாக வெளியேறிச் செல்லும் இளவரசனுக்குத் தெரியா ததல்ல. அவர்களெல்லோரையும் வருந்த வைக்கும் அவர் கடின மனதுடையவருமல்ல! 'நேற்று மலர்ந்த மலர் இன்று வாடிவிட்டதே! பறந்துவந்த புறா சிறகொடிந்து துடிக்கிறதே!' என்று மலர் வாடினால் மனம்வாடவும்,பறவை துடித்தால் அதைப் பார்க்கும் இவன் மனந்துடிக்கவுமான, இளகிய, குழைந்த மனமுடையவர்! இருந்தாலும், இவர்களுக்கப்பால் வேதனையில், துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கும் உலகம் இருக்கிறது! அதைக் காண, அதன் உண்மை அறிய, சித்தார்த் தன் கிளம்பினான்! சித்தார்த்தனின் மனத்தில் ஏராளமான புதிர்கள்,விளங் காத கருத்துக்கள் சுழன்றுகொண்டிருந்தன. உலகில் ஏன் துன்பம் மிகுந்திருக்கிறது? பிறப்பில் உயர்வு தாழ்வு ஏன்? சண்டாளனுக்கும் சதுர்மறை வேதியனுக்கும் உள்ள பேதங்கள் எவை? இவற்றை அடிப்படையாகக் கொண்ட மதபோதகங் களின் அடிப்படை என்ன? மறுபிறப்பு உண்டா? சுவர்க்க லோகம் உண்டா? கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இப்படிப் பலப்பல வினாக்கள் புத்தரின் மனத்தில் மோதிக் கொண்டிருந் தன இவைகளுக்கு அரண்மனையிலிருந்தால் விடைகாண் முடியாது என்று, அதைவிட்டுக் காட்டுக்குப் புறப்பட்டார். காவியுடை தரித்தார், கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி மனத்தில் பல கேள்விகளைத் தாங்கி அவர் புறப்பட்டார். .
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/153
Appearance