152 புத்தரின் காலத்தில் பிராமண சிரேஷ்டர்கள்தாம் வேதாந்திகளாகக் கருதப்பட்டார்கள். வேதசாத்திரங்கள் படித் தவர்கள், வேதத்தின் அந்தம் தெரிந்தவர்கள், பூதேவர்கள். எனவே, உலகத்தின் உண்மையெல்லாம் கடவுள்கள் தந்த இரகசியமெல்லாம் தங்களிடம்தான் இருக்கிறது என்று அந்தப் பிராமண வேதாந்திகள் இறுமாப்புடன் இருந்தார்கள். வேதம் படிப்பதும், வேதாந்த விசாரணையில் ஈடுபடுவதும் அவர் களுடைய பழக்கமாக - பெருமையாக இருந்தது. உண்மையைத் தேடிக்கிளம்பிய புத்தர் முதலில் பிராமண வேதாந்திகளான ஆரத்த காளாமான், உத்ராக ராமபுத்ரன் என்பவர்களிடம் போய்ச் சேர்ந்தார். ஆத்மாவைப் பற்றியும் அவர்கள் போதித் தார்கள். அவர்களுடைய வேதாந்தங்கள் புத்தருக்குச் சமாதானம் அளிக்கவில்லை. அவர்களுடைய மாயா வாதங் கள் புத்தருக்குப் புரியவில்லை. "பிராமணர்கள் இரவைப் பார்த்து இது பகல் என்பார்கள்: பகலைப் பார்த்து இரவு என்பார்கள். இந்த மாயா வார்த்தைகள் எனக்கு பிடிக்க வில்லை. இரவை இரவு என்றும் பகலைப் பகலென்றும் நான் சொல்லுகிறேன். ஒத்துக்கொள்ளுகிறேன்" என்று புத்தர் பின்பொருமுறை கூறினார். அந்தப் பிராமண வேதாந்திகளின் கோட்பாடுகள் சத்தற்றவைகளாயிருந்தன; பல இடங்களில் அறிவுக்குப் பொருந்திவராமல் இருந்தன. அதிகம் கேட்டால், வேதவாக்கு, பிரமாவின் எழுத்து, கடவுளின் மாயம்' என்று வேதாந்திகள் முடித்து விடுவார்கள். அறிவாராய்ச்சியுடன் அவை ஒத்துவரவில்லை. வேதாந்த விசாரணையில் பலன் காணாத புத்தர், வேதக்கோட்பாடுகள் நடைமுறையில் வைக்கப்பட்டுள்ள ஆலயங்களுக்குச் சென்றார். கடவுள் சிலைகளுக்குமுன் வைக்கப்பட்ட பலிபீடங்களைக் கண்டு புத்தரின் மென்மையான உள்ளம் நடுங்கியது. பிரார்த்தனைக்காரர்கள் கடவுளுக்குப் பலியென்று சொல்லி ஆடுமாடுகளைக் கொண்டுவந்து பலி பீடத்தில் சாய்க்க, வேதமந்திரங்களைச் சொல்லிப் பிராமணப் புரோகிதர்கள் அவற்றை வெட்டிக் கடவுளுக்கும் பிதுர்க்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/154
Appearance