183 களுக்கும் படைத்தார்கள். யாகத்தின் பெயராலும், பூசையின் பெயராலும் ஆடுமாடுகள் அலறித் துடித்திடக் கொல்லப்படு வதும், சோமரசத்தைக் குடித்து மக்கள் மதிமயங்கிக் கிடப் பதும் வழக்கமாயிருந்தன. இரத்தம் சிந்திய பலிபீடமும், சோமரச வாசனைவீசும் குருமார்களும், புத்தரை ஆலயத்தி லிருந்து வெளியேறச் செய்தன. "ஒருவன் மற்றொரு உயிரின் இரத்தத்தைச் சிந்துவதன்மூலம் தான் செய்த பாவக்கறையை எப்படிக் கழுவிக்கொள்ள முடியும்?" என்பது புத்தருக்குப் புரியவில்லை. புத்தர் உண்மையைத் தேடினார். வேதாந்திகளிடம் கிடைக்கவில்லை. ஆலயங்களில், அது தவிர, மற்றெல்லாம் இருந்தன. ஆனால், புத்தர் மேற்கொண்ட பயணம் முடிவடைய வில்லை. காடு நோக்கி அவர் நடந்தார், உண்மையைக் கண்ட - கண்டுபிடிக்கும் தவசிகள் பலர் காடுகளில் இருக்கிறார் கள் என்று கேள்விப்பட்டு. மகத நாட்டில் இருந்த உருவில்லா என்ற காட்டுக்குப் புத்தர் போய்ச் சேர்ந்தார். அங்கு அகோரத் தவஞ்செய்யும் பலர் இருந்தார்கள். அவர்களுடைய தோற்றமும், தவமும், பயங்கரமாயிருந்தன. சிலர் ஒற்றைக்காலில் இரவுபகலாக நின்று கொண்டிருந்தார்கள். சிலர் முள்ளைப் பரப்பி அதன் மீது உட்கார்ந்து தவஞ்செய்தார்கள்; சிலர் சடாமுடிகளை வளர்த்துக் கந்தலாடையுடன் சாம்பலைப் பூசிக்கொண்டு மயா னத்தில் பிணங்கள், கழுகுகள், நரிகள், பாம்புகள் இவைகளின் மத்தியில் உட்கார்ந்து, சிவனின் நாமத்தைச் சொல்லிக் கொண் டிருந்தார்கள்; கால்கைகள் அசைக்கவும் நீட்டவும் முடியாத படி மரத்துப்போகுமளவு மரத்தடியில் உட்கார்ந்தபடி பலர் இருந்தார்கள்; சிலர் தலைகீழாக நின்றார்கள்; சிலர் தீயின் மத்தியில் உட்கார்ந்தார்கள்; தங்கள் உடல் புண்ணா விதத்தில் சிலர் கல்லில் மோதிக் கொண்டார்கள், முள்ளால் சிலர் குத்திக் கொண்டார்கள்; தரையில் புரண்டு சென்றார்கள் சிலர். அவர்கள் தங்கள் உடம்புகளுக்கு கொடுக்காத தண்டனை யில்லை, தராத துன்பமில்லை. உடலும் உணர்வும் மரத்துப் அ.-10
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/155
Appearance