உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 போகும்வரை அவர்கள் பாடுபட்டார்கள். எலும்புகள் முட்டி, கண்கள் மங்கி, கன்னங்கள் ஒட்டி, தோல் வரண்டு, கைகால்கள் முடங்கிக் கோர உருவத்துடன் அந்த முனிவர்கள் காட்சியளித்தார்கள். "உடலை வென்று, உணர்ச்சியை அடக்கி, சதையைத் தண்டித்து வந்தால்தான், துன்பத்தை அதிகமாக்கிப் பழக்கப் படுத்தினால்தான், மறுபிறவியில் இன்பம் உண்டாகும்" என்று தவசிகள் நம்பினார்கள். அவர் களுடைய உறுதி புத்தரை ஆச்சரியத்திலாழ்த்தியது.புத்தரும் அவர்களைப்போலத் தவஞ்செய்ய ஆரம்பித்தார். உருவில்லா காட்டில் புத்தர் ஆறு ஆண்டுகள் தவசிகள் முறையில் இருந்தார். உணவைக் குறைத்தார். உடலைக் கடினப் படுத்தினார். ஆந்தையும் நரியும் அலறிடும் குகையில் படுத்துக் கிடந்தார். இரவு பூராவும் கண்விழித்துத் தவஞ்செய் தார். பட்டினி கிடந்தார், அசையாமல் நாட்கணக்கில் உட்கார்ந்திருந்தார். மற்றவர்கள் கண்டு வியக்கும்வகையில் உடலை மிகமிகக் கட்டுப்படுத்தி அவர் இருந்தார். வரவர உணவைக் குறைத்து, நாளுக்கு ஒருவேளை மட்டும், அதுவும் கந்தமூலாதிகளே உண்டுவந்தார். ஒருவேளை உணவுக்குப் பின் கற்பாறையில் போய்த் தியானத்தில் அமர்ந்துவிடுவார். ஆறு ஆண்டு தவக்கோலத்தின் பலனாய் அவர் உடல் இளைத்து எலும்புக் கூடாகியது. ஆறு ஆண்டுகள் தவசிகளுடன் இருந்தும், அவர்கள் சொல்லும் வகையில் கடுமையான தவங்களைச் செய்தும், புத்தரின் மனம் அமைதி அடையவில்லை. அவர் தேடிவந்த உண்மைகள் கிடைக்கவில்லை. உடல் சுருங்கியது: மார்பு எலும்புகள் முட்டிக்கொண்டு தெரிந்தன; கையும் காலும் குச்சி போலாயின. இலையுதிர்ந்த மரக்கிளையைப்போல ஆயிற்று அவர் உடல்! இருந்தாலும் தவமுறையில் சிறந்த உண்மையைக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற ஆவவில், உடல் இளைத் தாலும் உள்ள உறுதி குலையாமல். புத்தர் முன்னைவிட அதிகக் கட்டுப்பாட்டுடன், உடலை வாட்டிக் கொண்டார்.