உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் 155 ஒருநாள் ஆற்றில் நீராடச்சென்ற புத்தர். அதில் அமிழ்ந் ததும் எழுந்திருக்கமுடியாமல் தவித்தாராம். அந்த அளவு பலமற்று இருந்தது. ஆற்று நீரில் மிதந்து சென்று, தண்ணீருடன் தாழ்ந்திருந்த மரக்கிளையைப் பிடித்து, பின் நிமிர்ந்து நின்று கரையில் ஏறிக்கொண்டாராம். ஒரு கம்பை ஊன்றிக்கொண்டு மெதுவாகத் தட்டுத் தடுமாறிக் குகையை நோக்கிப் புத்தர் நடந்தார். சிறிதுதூரம் சென்றதும், பல வீனத்தால் மூர்ச்சையாகிக் கீழேவிழுந்துவிட்டார். சிறிதுநேரம் அப்படியே விடப்பட்டிருந்தால். அவருடைய உயிர் பிரிந் திருக்கும். நற்காலமாக அந்தப் பக்கம் வந்த இடையர்குலப் பெண், அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து, தன் கலயத் திலிருந்து பாலுஞ்சோறுங் கலந்த கஞ்சியை அவருடைய வாயில் ஊற்றினாள். புத்தர் மூர்ச்சை தெளிந்து எழுந்து தன் குகையை நோக்கி நடந்தார். உடலை வருத்திக்கொண்டால், உண்மையைக் காணும் பக்குவத்தை உள்ளம் பெற்றுவிடுகிறதா? புத்தருக்குச் சிறு சந்தேகம் வந்தது. குகைக்குள் போய் தவத்தில் அமராமல், வெளியில் மரத்தடியிலிருந்த பாறையின்மீது அவர் உட்கார்ந்து யோசித்தபடி இருந்தார். ஆறு ஆண்டுகளாகச் செய்து கொண்ட கொடுமைகளெல்லாம் வீண் என்று தோன்றியது. தவத்தில் ஈடுபடாமல் புத்தர் சிந்தனையுடன் உட்கார்ந் திருப்பதைப் பார்த்ததும், மற்றத் தவசிகளுக்கு அவர்மீது சந்தேகம் உண்டானது. அதிலும், ஆற்றங்கரையில் ஒரு பெண் அவர் முகத்தைத் துடைத்து அவருடைய வாயில் பாற் சோற்றை ஊட்டியதைப் பார்த்திருந்தார்கள். இப்பொழுது தியானத்தில் அமராமல் மரத்தடியில் கவலையுடன் உட்கார்ந் திருக்கும் புத்தரைப் பார்த்ததும், அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்? "பெண்ணைத் தொட்டுவிட்டான். பெண்ணாசையால் இவன் மனம் மயங்கிவிட்டது. அதிலும் கந்த மூலாதிகளை மட்டும் உண்ண வேண்டியவன் பாலும் சோறும் உண்ணலாமா?" புத்தருடைய கவலையின் காரணம் அவர்களுக்குத் தெரியாது. பெண் தந்த மயக்கமென அவர்கள்