உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிச்சயித்துக்கொண்டு, 156 பழையபடி காலை மடக்கியோ, தலைகீழ் நின்றோ, முள்மீது படுத்தோ தியானம் செய்யச் சென்றார்கள். அந்த இடைக்குலப்பெண்ணைவிட அழகுமிக்க அரசகுமாரியை விட்டுப் பிரிந்து புத்தர் வந்திருப்பது அவர் களுக்குத் தெரியாது. . எ புத்தர் சோர்வுடன் உட்கார்ந்திருக்கும்பொழுது, அந்த வழியே ஆட்டுமந்தை ஒன்று புழுதி எழுப்பிக்கொண்டு வந்தது. புத்தரின் கவனம் ஆட்டுமந்தைப் பக்கம் திரும்பியது. வரிசை யாக ஆடுகள் நடந்து, ஒலிசெய்தவண்ணம் கடந்து சென்றன. சில ஆடுகள் கூட்டத்தைவிட்டு விலகி ஓடின. ஆட்டிடையன் சத்தமிட்டும், கோல்கொண்டு மறித்தும்,தட்டியும், விரட்டியும் தனித்தனியே சிதறிச் செல்லும் ஆடுகளை ஆடுகளை மந்தையுடன் சேர்த்து வந்தான். ஒரு தாய் ஆடு இரண்டு குட்டிகளுடன் அந்தக் கூட்டத்தில் இருந்தது. ஒரு குட்டிக்குக் காலில் காயம் பட்டு, நடக்கமுடியாமல் பின்னால் நொண்டிக்கொண்டே வந்தது. மற்றொரு ஆட்டுக்குட்டி துள்ளி முன்னால் ஓடியபடி இருந்தது. பின்னால் தங்கிய ஆட்டுக்குட்டியைப் பார்க்கவும் முடியாமல் முன்னால் ஓடும் ஆட்டுக்குட்டியைப் பிடிக்கவும் முடியாமல்" தாய் ஆடு இரண்டுக்குமிடையில் தவித்தது. இடையனோ எல்லா ஆடுகளுடன் அதையும் சேர்த்து விரட்டியபடி இருந் தான். அடிபட்ட ஆட்டுக்குட்டி நடக்கமுடியாமல் விழுந்தது. தாய் ஆடு அலறிக்கொண்டு நின்றது. புத்தரால் இந்தக் காட்சி யைப் பார்த்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்க முடிய வில்லை. ஓடிப்போய், காலொடிந்த ஆட்டுக் குட்டியைக் கையில் தூக்கிக்கொண்டார். இவற்றையெல்லாம் விழித்துப் பார்த்தபடி, மரத்தடியில் முனிவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஆட்டுக்குட்டியைப் புத்தர் கையில் எடுத்துக்கொண்டதும், ஆட்டு மந்தையை ஓட்டிச்சென்ற ஆட்டிடையன் அருகில் வந்தான். யாரோ ஒரு காவியுடைதாரி ஆட்டுக்குட்டியைத் தூக்கிப்போக முயலுகிறார் என்பது அவனுடைய அச்சம்.