உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 ‘ஆட்டுக் குட்டியைக் கீழே விடுங்கள்!" அதட்டினான். " . டையன் 'அதன் காலில் காயம் பட்டிருக்கிறது. நான் அதைத் தூக்கிவருகிறேன். நீ இந்த ஆட்டுமந்தையை, கடும் வெய்யிலை யும் பாராது எங்கே அழைத்துச் செல்கிறாய்? என்று புத்தர் கேட்டார். ஆட்டு மந்தையை ஓட்டிச்செல்பவர்கள், பகலில் இளைப்பாறி,மாலை நேரத்தில் கிளம்புவதுதான் வழக்கம். "பிம்பிசார அரசரது யாகசாலைக்கு இந்த ஆடுகளை ஒட்டிச் செல்கிறேன். இன்றைய இரவு ஆடுகளைப் பலியிடு வார்கள்!' 'யாகசாலை! இந்த ஆடுகளனைத்தும் பலியிடப்படும்! எல்லா ஆடுகளும் - துள்ளி ஓடுகிற ஆட்டுக்குட்டியிலிருந்து, அவர் கையில் துவண்டிருக்கும் சிறு குட்டிவரை வெட்டப்படும்! யாகப் புரோகிதர் வெட்டுவார்; யாகசாலையில் இரத்தம் வழிந்தோடும்!' புத்தர் சிறிது யோசித்து, "சற்று இரு, நானும் அங்கு வருகிறேன்! முதலில் இந்தக் காயத்தைக் கட்டிவிடலாம்!" என்று மரத்தடியில் உட்கார்ந்து, ஆட்டுக்குட்டியின் காலைத் துடைத்து, அதற்குக் கட்டுப் போட்டார். புத்தரின் செய்கை அவரருகில் இருந்த தவசிகளுக்குக் கோபத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. தவக்கோலத்தி லிருக்கும் ஒருவர், தவநிலை மறந்து இருக்கிறாரேயென்று. அந்த நேரத்தில், தியானத்தில் அமர்ந்து ஆண்டவன் நாமத்தை ஆயிரத்தெட்டுத் தடவைகள் உச்சரித்து, தர்ப்பைப் புல்லை விரலில் சுற்றி, மாவிலையால் கமண்டலத்திலிருக்கும் நீரை எடுத்துத் தெளித்துத் தன்னையும் தன் சுற்றுப்பக்கத்தையும் புனிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவரோ ஆண்டவனைத் தியானிக்கவேண்டிய நேரத்தில் ஆட்டுக்குட்டி யின் காலைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். தாழ்ந்த சாதியின்னான இடையனிடன் பேசுகிறார். அது மட்டுமா?