158 தர்ப்பைப்புல்லை ஆட்டுக்குக் கொடுக்கிறார். கமண்டல நீரை எடுத்து, அதன் காலைக் கழுவி விடுகிறார்! உலக பந்தங்களை அறுத்து முக்திபெறத் தவஞ்செய்யும் முனிவர் உலகமாயையில் சிக்கலாமா? இடையனுடன் பேசிக் கொண்டிருப்பதும், வைத்துக்கொண்டு ஆட்டைத் தூக்கி தவசியின் செயலா? விளையாடுவதும் "சித்தார்த்த முனி கெட்டுவிட்டார்! காலையில், ஆற்றங் கரையில் ஒரு கன்னிப் பெண் அவருக்கு உபசாரங்கள் செய்தாள். இவர் புன்னகையுடன் எழுந்து வந்தார். அதற்குப்பின் தியானத்தில் உட்காராமல் பெண்ணை நினைத்தபடி மயங்கியிருந்தார். இப்பொழுது ஆட்டு மந்தையைப் பார்த்துக்கொண் டிருக்கிறார்!" அருகிலிருக்கும் தவசிகள் பேசிக்கொள்வது புத்தரின் காதில் விழுந்தன. மற்றத் தவசிகள் புத்தரைப்பற்றி பேசிக் கொண்டிருப்பது வீணான காரியம். அந்த நேரத்தில் தியானம் செய்தால், ஒற்றைக்காலில் நின்று நாமாவளி செபித்தால், அது மேலானது என்று அகோரத் தவங்களைச் செய்யத் தொடங் கினார்கள். முள்மெத்தையில் படுப்பவர்கள், தணல்மீது நடப்பவர்கள், தலைகீழாக நிற்பவர்கள். சாம்பலைப் பூசி மண்டையோட்டை வைத்து மந்திரம் சொல்பவர்கள் - தத்தம் தவமுறைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். - புத்தருக்கு அருகில் இருந்த முனிவர், மிக வருத்தத்துடன் சொன்னார்: "சித்தார்த்தனே! அகோரத் தவசிகள் மத்தியில் நீ மட்டும் ஒரு அஞ்ஞானியாகிவிட்டாய்! மாயா உலகத்தை வெறுக்கவேண்டியவன் மாயா பந்தங்களில் சிக்குண்டாய்! மற்ற முனிவர்களைப் பார்! இந்த உலகவாழ்வை ஒடுக்கி, உடலின் உணர்வுகளை அழித்து, கடுமையான தவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்! ஆனால் நீ செய்த தவங்களின் பலன் வீணாகிறது!" புத்தர் சிறுநகை புரிந்தார். முனிவரே! நான் ஒன்று கேட்கிறேன்! இந்த முனிவர்களின் தவங்களையெல்லாம் ஒன்று
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/160
Appearance