உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 சேர்த்தாலும், அதனால் உலகில் யாருக்காவது பயன் உண்டா? சிறு உயிரின் துன்பத்தைப் போக்கவாவது உதவுகிறதா?" புத்தரின் கேள்வி பிராமண முனிவரைத் திகைப்படையச் செய்தது. புத்தரின் கேள்வி அவருக்குப் புரியாமலில்லை. புரிந்த காரணத்தால்தான் திகைப்படைந்தார். உலகு படும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல், மரத்தடியில் உட்கார்ந்து மகேசனைப்பற்றிப் பாடிக் கொண்டிருப்பதைப் புத்தரின் கேள்வி சுட்டிக்காட்டியது. தவங்களின் பயனாய் ஏதாவது பலன் கிடைத்தாலும், அது தவஞ் செய்பவர்களை மட்டும் மேலோகத்துக்கு அனுப்பப் பயன்படும். அதனால் மற்றவர்களுக்கு என்ன பலன்? தவசிகளின் நோக்கத்தில் வடிகட்டிய சுயநலம் இருந்தது. ஆட்டுக்குட்டியை அணைத்துத் தூக்கிக்கொண்டு புத்தர் மேலே சொன்னார்: "உலகின் துன்பங்களையெல்லாம் பார்த்தபடி, பேசாமல் அமர்ந்து, அகோரத்தவத்தில் ஈடுபடும் ஆயிரக்கணக்கானவர்களைவிட, ஒரு ஆட்டுக்குட்டியின் சிறு துன்பத்தைப் போக்குபவன் செய்யும் பணி மேலானது!' ஆட்டுக் குட்டியைத் தடவிக்கொடுத்து, புத்தர் நடக்க ஆரம்பித்தார். தாய் ஆடு, அவரைக் கனிவுடன் பார்த்தபடி அருகில் வந்தது. ஆட்டு மந்தை நகர்ந்தது, பிம்பிசாரன் யாக சாலையை நோக்கி! பிராமண முனிவரைப் பார்த்துப் புத்தர் கேட்ட கேள்வி அவ்ருடைய அன்பு மார்க்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்று கூறலாம். பிராமண வேதாந்திகளும், முனிபுங்கவர்களும் அகோரத் தவஞ் செய்தார்கள்; அவர் எதிர்பார்த்ததெல்லாம், ஆலால சுந்தரனின் அருள் கிட்டும்; அந்த உலகில் இடையறா இன்பம் கிடைக்கும்; பாவங்களை நீக்கிடலாம்; தேவலோகம் செல்ல லாம் என்பவை! அவர்கள் பாடுபட்டது தங்களுக்காக; இந்த உலகில் இல்லையென்றாலும் மறு உலகில் இன்பம் கிடைக்க 1