உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வேண்டுமென்தற்காக! அதன் அடிப்படையில் சுயநலம் இருக் கிறது! உலகம் அழிந்தாலும், மற்றவர்கள் துன்பச்சுழலில் சிக்கித் துடித்தாலும், அவர்கள் கவலைப்படுவதில்லை! மக்களின் கூக்குரல், ஏழைகளின் கதறல், நோயாளியின் அழுகுரல், மகேசனை பற்றியும் மறுவுலகத்தைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களின் காதில் விழுவ தில்லை! புத்தரின் கேள்வியில் பொதுநலம் இருந்தது. மற்றவர் களுடைய துன்பத்தைப் போக்குவது, அதன்மூலம் இன்பங் காணுவது, அதுவே அன்பு மார்க்கத்தின் முக்கிய கொள்கை யானது மற்ற மதத்தினர் மகேசனைப் பற்றியும் ஆண்டவனைப் பற்றியும் மறுவுலகத்தைப் பற்றியும் விதவிதமான கடவுள் களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தபொழுது, புத்தர் மட்டும் "கடவுளைப்பற்றி ஒன்றும் தெரியாது. அதைப் பற்றிக் கவலைப்படவும் வேண்டாம். துன்பப்படும் மக்கள் கூட்டம் இருக்கிறார்கள். அவர்களின் துன்பங்களைப் போக்கிட முயலுவோமாக!" என்று சொன்னார். பக்தி வேண்டுமென்று மற்ற மதத்தினர் போதித்தனர். பிறவுயிர்களிடம் அன்பு காட்ட வேண்டுமென்று புத்த மதம் போதித்தது. காடுகளுக்குச் சென்று அகோரத் தவம் செய்வதன்மூலம் நிலையான இன்பம் பெறலாமென வேதாந்திகள் நம்பினார் கள். நாட்டு மக்களுக்குப் பணிபுரிந்து, அவர்கள் துன்பங் ளைவதே உண்மையான இன்பம் என்ற புத்த மதத்தினர் கருதினர். களை வேத வாக்குகளில் சந்தேகங்கொள்வது கூடாது, அது பெரும் பாவமென்று மற்ற மதத்தினர் நம்பினார்கள். ஆனால் எதைக் கண்டாலும் கேள்வி கேட்பதும், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் சந்தேகத்துடன் ஆராய்ந்து, அறிவுக்கு ஒத்துவந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதும்