உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தரின் கொள்கை. 161 எதையும் வேதவாக்காக, வேதவாக்காக, முடிந்த முடிபாக ஏற்றுக் கொள்வதைப் புத்தர் ஆதரிக்கவில்லை. ஒரு சமயம் ஒரு நாட்டுக்குப் புத்தர் சென்றபொழுது, அங்கிருந்தவர்கள் கேட்டார்கள்! "பிராமணர்களும் மற்றவர் களும் எங்களிடம் வந்து மத போதனை செய்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் கூறுவதுமட்டும் உண்மை மற்றவர்களின் மதக்கொள்கைகளெல்லாம் பொய்யானவை யென்று வலியுறுத்துகிறார்கள். இவர்களுடைய போதனை களைக் கேட்டு எங்களுக்கு குழப்பம் வருகிறது. எது உண்மை யான கொள்கை என்பது புரியவில்லை. க புத்தர் அதற்குப் பதிலளித்தார்: "தரப்படும் கருத்துக் களைப்பற்றி இயல்பாகக் கேள்விகள் எழவேண்டும். பல தலைமுறைகளாக வந்தது, பல இடங்களில் நிலவுவது என்பதற்காக, எதையும் அப்படியே நம்பிவிடாதீர்கள். பலர் நம்புகிறார்கள், பலர் பேசிக்கொள்கிறார்கள் என்பதற்காக எதையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். பழைய முனிபுங்கவர் ஒருவர் எழுதினார் என்று ஆதாரம் கூறப்பட்டாலும் நம்பிவிடாதீர்கள். அபூர்வமானதா யிருக்கிறது, ஆதலால் இதை ஒரு தேவனோ, அல்லது ஒரு அவதாரப் பிறவியோ செய்திருக்கவேண்டுமென்றும் ஒப்பக்கொள்ளாதீர்கள். உங்கள் மனத்திற்குப் பிடித்தமானதா யிருக்கிறது என்பதற்காகவும் ஒன்றை எடுத்துக்கொள்ளாதீர்கள். சீர்தூக்கி ஆராய்ந்து, அது பகுத்தறிவுடன் ஒத்து வந்தால், அது எல்லோருக்கும் நன்மை பயப்பதாக இருந்தால், அந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்." . தனது கடவுளே உண்மையான கடவுள், தனது வேதமே தேவ வாக்கு, அதை அப்படியே நம்பி நடப்பவர்களுக்குமட்டும் மோட்சலோகத்தில் இடம் கிடைக்கும், நம்பாதவர்களுக்குப் படுநரகந்தான் என்று மற்ற மதங்கள் போதிக்கின்றன. மற்ற மதத் தலைவர்கள், ஆச்சாரியர்கள், தூதர்கள், கடவுளின் பிரதிநிதிகள் எல்லோரும் முடிந்த முடிவுகளை, வரையறுத்த