உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மதக் கொள்கைளைத் தந்தார்கள். புத்தர் மட்டும் எதையும் முடிவாக, அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதாகச் சொல்லவில்லை. "எப்பொருள் ளெத்தன்மைத் தாயினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்று வள்ளுவர் கூறிய கருத்துக்களுக்கும், மேலே குறிக்கப் புத்தரின் அறிவுரைகளுக்கும் பட்ட யிருக்கின்றன! எவ்வளவு ஒற்றுமை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதைப் புத்தர் ஆதரிக்க வில்லை. நம்பித்தான் ஆகவேண்டும் என் கட்டாயமும் அவரிடம் கிடையாது. கேள்விகள் தொடுத்துக் கருத்தை ஆராய்வதைப் புத்தர் வளர்த்தார். உண்மையில். அறிவுக்கு ஒத்துவந்த பிறகுதான் எதையும் ஒத்துக்கொள்ள வேண்டுமென்று அவர் சொன்னார். மற்றவர்களுக்கு மட்டுமல்ல, தான் சொல்லும் கருத்துக்களுக்கும், அதே அறிவாராய்ச்சி முறையை வைக்க வேண்டுமென்றும் அவர் சொன்னார். "நான் சொல்லும் கோட்பாட்டை, பயபக்தி காரணமாக அப்படியே ஏற்றுக்கொண்டு விடாதீர்கள். நெருப்பில் தங்கம் போட்டு ஆராயப்படுவதைப்போல, அறிவாராய்ச்சியில் போடப்பட்டுக் கருத்துக்கள் ஒத்துக் கொள்ளப்பட வேண்டும்!" என்று புத்தர் தன் கூட்டத் தினருக்கு அறிவுறுத்தினார். பழைய சம்பிரதாயம், வேதவாக்கு என்று எதையும் புத்தர் ஏற்றுக்கொள்வதில்லை. அதிலும் பிராமண மதத்தினரின் போக்கும், அதிகாரக் குரலும் அவருக்கு வேம்பாக இருந்தன. "தெய்வீகம், வேதவாக்கு, கடவுள் கடவுள் செய்தது" என்று பிராமணர்கள் ஆதாரங்கள் காட்டுவதைப் புத்தர் எதிர்த்தார். அது குருடர்கள் ஒருவர்பின் ஒருவராகச் செல்வதை ஒக்கும். "