163 முதலில் செல்லும் குருடனுக்கும் வழி தெரியாது: மத்தியில் செல்லும் குருடனுக்கும் வழி தெரியாது; கடைசியில் செல்லும் குருடனுக்கும் வழி தெரியாது.' கேள்வி கேட்பதும், அறிவுத் துணைகொண்டு ஆராய் வதும், புத்தரின் கோட்பாடுகளுக்கு அடைப்படையாயின. புத்தர் கேட்ட கேள்விகள் பலப்பல. கடவுளைப்பற்றி, சாதிகளைப்பற்றி,அவர் கேட்ட கேள்விகள், ஆணவத்துடன் ஆட்சிசெய்து வந்த பிராமணமதத்தைக் கலகலக்கச் செய்தன. புத்தரின் கேள்விகள், அறிவாராய்ச்சி செய்யும் வரண்ட பரந்த பாலை வனத்துக்குள் அவரை அனுப்பவில்லை. உலகின் நிலையை உணராமல், வானத்தைப் பார்த்து வேதாந்தம் பேசுவோர்கள் உண்டு. ஆனால் புத்தரின் கேள்விகளும், விளக்கங்களும், உண்மைகாணுவதுடன், உலகின் துன்பங்களை அழித்து இன்பங் காணுவதற்கும் பயன்பட்டன. கேள்விகளைக் கேட்டு ஆராய்வதன் மூலம் உண்மை வெளிப்படுகிறது என்பது மட்டும் போதாது; உண்மை என்று ஒருவனுக்கு முதலில் கிடைத்தாலும் அதன்மீது கேள்விகள் போட்டு அறிவாராய்ச்சியில் ஈடுபடவேண்டும். அப்பொழுதுதான் அதன் பலன் அவனுக்கும் கிடைக்கும். அதற்கு இரண்டு உதாரணங்களை அவர் தந்தார். சுவையான தேன்! அதை வைத்திருக்கும் கிண்ணத்துக்கு அதன் இனிமை தெரியாது. அதைப்போல் உண்மையை ஆராயாது ஏ ஏற்றுக்கொள்பவன், தேனைச் சுவைக்கத் தெரியாது வைத்திருக்கும் கிண்ணத்தை ஒத்திருக்கிறாள். அரசவையில் அரசன் போய்விடுகிறான்; அரியணை காலியாகக் கிடக்கிறது. அதைப் பார்த்த வேலைக்காரன் ஒருவன், அரசனின் உடைகளை அணிந்து, அரியணையில் அமர்ந்து, அரசன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லு கிறான். அவனை அப்பொழுது பார்க்கும் யாரும் அரசனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/165
Appearance