உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 உண்மை உள்ளத்தில் உறையவேண்டும். அப்பொழுதுதான் அதன் பலனும் நலனும் வெளியுலகுக்குப் பயன்படும். உண்மையைக் காணுவதுடன் அதை அனுபவசாத்தியமாக ஆக்கவேண்டும். அறிவாராய்ச்சியைப் பற்றி மற்றொரு இடத்தில் கூறிடும்பொழுது, "ஒருவருடைய கருத்துக்களை மற்றவர்கள் ஆராய்ச்சியின்றி நம்பிவிடக் கூடாது. மூத்தோர் கள் சொன்னது, புத்தர் சொன்னார், சங்கம் சொல்கிறது என்று எந்த ஆதாரங் காட்டினாலும், ஒருவர் சொல்வதை மற்றவர் ஏற்றுக்கொள்ளக் ஏற்றுக்கொள்ளக் கூடாது. உண்மையென்பதை அதன் போக்கில் விட்டுவிடாமல், மற்றவர்கள் தர அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், தன் மனத்தில் ஆராய்ந்து பின் ஏற்றுக் கொள்ள வேண்டும். சம்பிரதாயத்துக்கும், ஆதாரங்களுக்கும், அடிபணிவதில் பலன் கிடையாது. அறிவுபெற, பயிற்சியும் கேள்வியும் முக்கியமானவை. பயிற்சியில் அனுபவமும், ஆராய்ச்சியும் பங்குபெற வேண்டும்." புத்தரின் மார்க்கம், அறிவின் வயப்பட்டதாக, அன்பு வழிப்பட்டதாக, மனிதாபிமானம் மிக்கதாக ஆரம்பித்தது. வாழ்வின் நலம் என்ற உயர்ந்த பண்புக்கு புத்த மார்க்கம் அழைத்துச் சென்றது. மற்ற மதத்தலைவர்கள், வேதகர்த் தாக்கள்,மார்க்கங்கண்ட தீர்க்கதரிசிகள் எல்லோரும் முடிந்த உண்மைகளை, கடவுள் பேரால் தந்த பொழுது, புத்தர் மட்டும் தன் அறிவுக்குப்பட்ட கருத்துக்களைத் தந்தார். உள்ளத்தில் எழுந்த அன்புரைகளை வழங்கினார். தெய்வீக மென்றோ, கடவுள் வாக்கு என்றோ, எதையும் அவர் சொல்லிக்கொள்ள வில்லை. மகேசனையும் மறுவுலகத்தையும், மற்ற மதத்தினர் தேடித் திரிந்தபொழுது, புத்தர் மட்டும் மக்களையும், அவர் தம் இன்ப துன்பங்களையும் பற்றி எண்ணினார். அகோரத் தவம் செய்தால் ஆண்டவனை யடையலாம், தேவலோகம் போகலாம் என்று மற்றவர்கள் உலகைவிட்டு விலகிச் சென்ற பொழுது, புத்தர் "அகோரத் தவங்கள், உலகில் ஒருசில உயிரின் துன்பத்தைப் போக்கவாவது பயன்படுமா?" என்று