165 கேட்டார். அந்தக் கேள்விக்கான விடை, பின் அன்பு மார்க்க மாக மலர்ந்தது. மகேசனல்ல, மக்கள்! மறு உலகமல்ல, இந்த உலகம்! மாயா வாதங்களல்ல, ஆராய்ந்து பார்க்கும் திறன்! நான்கு சாதிகளும் நாலாயிரம் பிரிவுகளும் அல்ல, ஒன்றே குலம் என்ற கோட்பாடு. சுயநலமல்ல, பொது நலம்! கொடுமை செய்தல்ல, அன்பின் வழி, அவர் மார்க்கம் தழைத்தது! புத்தர் எழுப்பிய கேள்விகள் பரவப்பரவப் பிராமண மதம் தத்தளித்தது. சாதி பேதங்கள் சருகுகள்போலச் சுழன்றன! அஞ்ஞானமும், கண்மூடித்தனமும் நிறைந்த நாட்டில், அறிவின் ஒளியாய்,அன்பின் வடிவாய்ப் புத்தர் நடமாடினார்! மதவெறியும் புராணப் புளுகுகளும் மாயாவாதங்களும் நிறைந்த நாட்டில், முதல் பகுத்தறிவுவாதியாய்ப் புத்தர் வெளி வந்தார்! அவருடைய கருத்துக்களுள் சில இன்று குறைபா டுடையதாய்க் காணப்படலாம்; அன்று இருந்த சூழ்நிலையில். அன்று கிடைந்த அறிவாராய்ச்சிகளில் பல கருத்துக்களை அவர் வழங்கினார். முடிந்த முடிபுகளென்றோ, கடவுள் தந்தவை யென்றோ, 'நம்பாவிட்டால் ரௌரவாதி நரகம் என்றோ பயமுறுத்தாமல், மக்களின் ஆராய்ச்சிக்கு முதலிடம் அளித்து, தமது கருத்துக்களை அவர் பரப்பினார். தமது அன்பர்களை யும், முக்கியமான புத்த சாதுக்களையும் பார்த்துச் சொல்லும் பொழுது, "பிட்சுக்களே! மக்கள் நலமடைய, உலகம் நன்மை யடைய, உலகமக்கள் அனைவரிடமும் முழுஅன்புடன் பணி புரிய நீங்கள் செல்லுங்கள்!" என்ற வாழ்த்துரை கூறப்பட்டது. நாடெங்கும் சுற்றிய புத்த சாதுக்கள் மக்களின் இன்னலைப் போக்கி, நோய் நொடிகளை ஆற்றி, வெறுப்பைக் குறைத்து,
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/167
Appearance