166 அன்பை வளர்த்து, சண்டைகளைத் தீர்த்து, அமைதியை நிலவச் செய்து, அன்பு மார்க்கத்தை பரப்பினார்கள்! மற்ற மதத்தலைவர்கள் நாட்டு மக்களைக் காட்டுக்குத் துரத்தியடித்தபொழுது, வாழ்வைவிட்டுக் கடுந்தவத்துக்குத் துரத்தியடித்த பொழுது, புத்தர் காட்டைவிட்டு நாட்டுக்குள் வந்தார். உலகுபடும் துன்பங்களைப் பார்த்தபடி உட்கார்ந் திருக்கும் ஆயிரக்கணக்கான முனிவர்கள், சிரேஷ்டர்கள், முக்தர்கள், பித்தர்கள் இவர்களைவிட, மற்றொரு உயிரின் துன்பத்தைப் போக்குபவன் மேலானவன் என்று அவருக்குப் பட்டது. ஆண்டவனை நோக்கி அருச்சிக்கும் ஆயிரத்தெட்டு நாமங்களைவிட, பிறவுயிரிடம் சொல்லப்படும் ஓர் அன்புச் சொல் மேலானதாக அவருக்குப் பட்டது. மற்றவர்களின் மதமும் வேதமும், தவமும் துறவும் தனிப் பட்டவர்களுக்கு மோட்சமளிக்க.-மறுவுலகில் வசதியளிக்க ஏற்பட்டவை. புத்தரின் அன்புமார்க்கம் பிறவுயிர்களின் துன்பத்தைப் போக்க ஏற்பட்டது. வேத மார்க்கங்கள் ஆண்டவனிடம் போக வழி தேடின, கண்ணுக்கெட்டாத தூரத்திலிருக்கும் பரமாத்மாவுடன் இணைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தன. புத்தரின் கோட்பாடு உலகத்திலிருக்கும் ஒரு ஆத்மாவை - உயிரை-மற்றொரு உயிருடன் அன்புவழியில் இணைக்கும் வேலையில் ஈடுபட்டது. ஆறு ஆண்டுகளாக, ஆண்டவனையும் வேதமார்க்கத்தை யும் முன்வைத்துச் செய்துவந்த கடும் தவத்தையும் கைவிட்டு. அடிபட்ட ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு புத்தர் காட்டைவிட்டுப் புறப்பட்டபொழுது மற்றத் தவசிகள் கோபித்தனர்; எரிதவழ் கண்களால் உருட்டி விழித்தனர். அன்பு வழிந்திட, சாந்தம் குழைந்திட, புன்முறுவலுடன், சாக்கியமுனி தனது தவவேலையைவிட்டு ஆட்டுக்குட்டியைச் சுமந்து வருவது கண்டு, மகதநாட்டு மக்கள் ஆச்சரியப்பட்ட னர், வியந்தனர், போற்றினர்!
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/168
Appearance