உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பெருஞ் சிறப்பாகும். மொழியின் நுட்பங்களையெல்லாம் நன்கு ஆராய்ந்து அறியவல்ல சான்றோர்கள் 'முத்தமிழ்' என்று அழைக்கலாயினர். முத்தமிழ் என்பதற்குப் பொதுப்படையாக 'இயற்றமிழ்', 'இசைத்தமிழ்', 'இயக்கத்தமிழ்' அல்லது 'நாடகத்தமிழ்' என்று கூறுவர். இயலுக்கு என்று ஒரு தமிழ், இசைக்கு என்று மற்றொரு தமிழ், நாடகத்திற்கு என்று வேறோர் தமிழ் என்ற அடிப்படையில் மூன்று வகையான தமிழ்கள் தனித்தனியாக இருக்கின்றனவா? என்றால், இல்லை! இயலால் ஆன தமிழ்', 'இசையால் ஆன தமிழ்', 'நாடகத் தால் ஆன தமிழ்' என்னும் மூன்று வகையான தமிழ்களும் இல்லை! அப்படியாயின் ஏன் முத்தமிழ் என்று பெயரிட்டு அழைத்தனர் என்று வினவக்கூடும். தமிழ்ச் சான்றோர்கள் மொழியின் நுட்பங்களை நன்கு அறிந்திருந்த காரணத்தால், மொழிக்கு 'இயல் தன்மை இசைத் தன்மை', 'இயக்கத் தன்மை' அதாவது, 'நாடகத் தன்மை' ஆகிய மூன்று தன்மைகளும் உண்டு என்பதைக் கண்டறிந்தனர். எடுத்துக்காட்டாக "QUIT' என்ற ஓரெழுத்தை, ஒரு சொல்லைக் கூர்ந்து கவனிப்போம். 'வா' என்று ஏட்டில் எழுதிக் காட்டும்போது, இயலாக நிற்கின்றது. ஒருவன் தன் குழந்தையை 'வா' என்று அழைப்பதாக வைத்துக் கொள் வோம். அப்பொழுது வாயிலிருந்து அன்பு தோய்ந்த, குழை வான ஓசையுடன் 'வா' என்ற சொல் வெளிப்படும். அதே போது அவனது உடலில் சிலபல மெய்ப்பாடுகள் தோன்றும். அவனுடைய கண்கள் ஒளி வீசும்; முகம் பரந்து விரிந்து மலர்ந் திருக்கும்; குழந்தையை வாரி எடுக்க இரு கைகளும் நீளும். இப்படிச் சில பல மெய்ப்பாடுகள் தோன்றும். என்ற அவனே, அவனது வேலைக்காரனை 'வா' என்று அழைப்ப வைத்துக்கொள்வோம். அப்பொழுது 'வா' இயலோடு சேர்க்கின்ற ஓசையும் மாறும், மெய்ப்பாடுகளும் தாக