1 22. வைட்டமின் பி-1 கண்டுபிடித்த பெரியார் உணவுப் பிழைகளால் நேரும் பிணிகளை ஒழிக்கும் நோக்கத்தோடு, வாழ்நாள் முழுவதையும் ஆராய்ச்சியில் ஈடுபத்தியுள்ள டாக்டர் ராபர்ட் ஆர்.வில்லியம்ஸ், செயற்கை தயாமின் (வைட்டமின் பி. 1) கண்டுபிடித்து, அண்மையில் 20 ஆண்டு நிறைவுற்ற நாளன்று, அவரை, அவருடைய உடன் ஊழியர்கள் சிறப்பித்தார்கள். தயாமினைக்கொண்டு ரொட்டிக்குச் சத்தூட்டத் தொடங்கியதன் பதினைந்தாவது ஆண்டு நிறைவும் அதேதான். அவருக்கு அளித்த விருந்தில் வியாபாரிகள், விஞ்ஞானிகள், ரொட்டி சுடும் அமெரிக்க நிலையத்து உறுப்பினர்கள், ஆக 136 பேர்கள் கலந்துகொண்டனர். அவ்வமயம், பிரபல உலக விஞ்ஞானிகளிடமிருந்து வந்த கடிதங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று டாக்டர் வில்லியம்சுக்கு வழங்கப்பெற்றது; அப் புத்தகம் பின்வருமாறு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது; "விஞ்ஞானத்தில் அவர் அடைந்த அரும்பெரும் சாதனையைப் பாராட்டியும், மனித இனத்துக்கு அவர் ஆற்றிய பணியினுக்கு நன்றி பாராட்டியும் இந்தக் கடிதங்கள் டாக்டர் ஆர். வில்லியம்சுக்கு வழங்கப்படுகின்றன." ஆந்திர தேசத்தில், நெல்லூரில், 1886 பிப்ரவரி 19இல், அமெரிக்க மிஷனரிப் பெற்றோருக்கு, ராபர்ட் ராம்பட்னம் வில்லியம்ஸ் மகனாகப் பிறந்தார்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/170
Appearance