உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 . பத்தாவது வயதில் அவர் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு அவர்பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. 1908இல் அவர் இரசாயனத்தில் எம்.எஸ்ஸி. பட்டம் பெற்று, பிலிப்பைன்சுக்கு ஆசிரியர் வேலை செய்யச் சென்றார். சிறிது காலம் கற்றுக் கொடுத்தபின், மணிலாவில் உள்ள விஞ்ஞான நிலையத்தில் இரசாயன ஆராய்ச்சி செய்யலானார். திட்டப்பட்ட அரிசி உணவையே முக்கிய உணவாக உட்கொண்ட மக்களிடையே, பலருக்கு, பெரிபெரி எனும் நோய் கண்டிருந்ததை அங்கேதான் அவர் கண்டு, அதுபற்றி அக்கறை கொள்ளலானார். அந்நோய் பிடித்திருந்தவர்களுக்கு அரிசித் தவிட்டுச் சத்தைச் சிறிது ஊட்டி, அவர்களைக் குணப்படுத்த முடியும் என்று அவர் கண்டு பிடித்தார். தீட்டாத அரிசியிலுள்ள ஏதோ ஒன்று இவ்வாறு நன்மை செய்கிறது; அது என்ன என்ற நீண்ட ஆராய்ச்சி அதன்பின் நடந்தது; அதன் பயனாகக் கடைசியில் அவர் வைட்டமின் பி - 1ஐக் கண்டுபிடித்தார். 1915இல் டாக்டர் வில்லியம்ஸ் அமெரிக்காவுக்குத் திரும்பி வந்து, அந்த வைட்டமினைத் தனியே பிரித்தெடுக்கும் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார்; முதலில் தாமாவே முயன்றார்; பின்னர் ராபர்ட் வாட்டர்மன், ஈ.ஆர். புக்மன் ஆகிய விஞ்ஞானிகளின் உதவியோடு முயன்றார். 1933க்குள் வைட்டமின் பி-ஐக் கண்டுபிடித் தார்; மூன்று ஆண்டுகள் கழித்து, அதன் அமைப்பைத் தீர்மானித்து, செயற்கை வைட்டமின் பி-1ஐச் செய்தார். தமது ஆராய்ச்சி மனித இனத்துக்கு நலம் பயக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், டாக்டர் வில்லியம்ஸ், உணவுப் பிழை!நோய்களை ஒழிப்பதற்கென, வில்லியம்ஸ் - வாட்டர்மன் தர்மநிதியை ஏற்படுத்தி, தாம் கண்டுப்பிடித்ததால் கிடைத்த ராயல்டி பணத்தில் பெரும்பகுதியையும் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வதற்கே ஒதுக்கிவைத்தார். மேலும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த பின்னர், இறுதி யாக. பிலிப்பைன்சில் 70,000 மக்கள் மீது பரிசோதனை அ.- 11