உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. சைமன் பெரூட் இன்றைக்குச் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன், ஒருநாள், வியன்னா நகரத்தில் ஜோசப் புரூயர் (Josef Breuer) என்ற மருத்துவர், தம்மோடு வேலை பார்த்துவந்த மற்றொரு இளம் மருத்துவரிடம், தன்னிடம் மருத்துவ உ.தவியை நாடிவந்த ஒரு இளம் பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டார். அந்தப் பெண் இஸ்டிரியா (Hysterical Paralysis) என்ற நரம்புத் தளர்ச்சி மயக்க நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். புரூயர் அந்தப் பெண்ணை இப்னாடிசம்(Hypnotism) என்ற ஆழ்ந்து உறங்கும் நிலை உண்டாக்கும் வித்தைகொண்டு ஆராய்ந்தபோது, தனக்கு முன்பு உண்டான மகிழ்ச்சியற்ற, மனவெழுச்சி வயப் பட்ட பல அனுபவங்களை அவள் விவரித்துக் கூறினாள். ஆனால், அந்த அனுபவங்களை உணர்வுள்ள (conscious) மனநிலையில் அவளால் நினைவுபடுத்திக் கூற முடியவில்லை. அந்த அனுபவங்களே அவளது நோய்க்குக் காரணமாக அமைந் திருந்தன. அவைகளைக் கூறியபின் அவளுடைய நோயும் மறைந்துவிட்டது. B இந்த வியப்புக்குரிய நிகழ்ச்சிக்குப்பின், இரு மருத்துவர் களும் சேர்ந்து நரம்புத்தளர்ச்சி மயக்கநோயால் பாதிக்கப் பட்ட பலரை ஆராய்ந்தனர். அவர்களிடமும், நினைவில் கொள்ளமுடியாமல் மனதில் மூடிவைக்கப்பட்ட அனுபவங்களே அவர்களது நோய்களுக்கு அடிப்படையாக இருக்கக் கண்டனர். புரூயர் மேற்கொண்டு இதைப்பற்றி ஆராய எண்ணமில் லாமல், தமது வழக்கமான உடல்நோய் மருத்துவப் பணி யிலேயே கவனம் செலுத்தலானார். ஆனால், அவருடன்