உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இருந்த இளம் மருத்துவர் வியப்புக்குரிய மனஅமைப்பின்பால் தமது கவனத்தைத் திருப்பினார். புறக்கணிக்கப்பட்ட நினைவுச்சுருளைச் சுமையாகக் கொண்டு மறைந்து கிடக்கும் மன னத்தை ஆராய முற்பட்டார். பல ஆராய்ச்சிகளின் முடிவாக, மனிதனின் மன அமைப்புப் பற்றிய புதிய புரட்சிகரமான கொள் கையையும், உள்நோய் தீர்க்கவல்ல புதியதொரு முறையையும் கண்டார். அவரே சைமன் பெரூட் (Sigmund Freud) என்பவ ராவார். அவர், தாம் கண்டுபிடித்த முறைக்கு உளக்கூறுபாடு (Psycho Analysis) என்ற பெயரைக் கொடுத்தார். சைமன் பெரூட் செக்கோசுலோவாகியாவில், ஃபிரெய் பெர்க் (Freiberg) என்ற நகரில், 1856 ஆம் ஆண்டு மே திங்கள் 6ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் ஒரு கம்பளி வியாபாரி. அவரது இரண்டாவது மனைவியின் மூத்த பிள்ளை யாக பெரூட் பிறந்தான். பெரூட் நான்கு வயதுச் சிறுவனாக இருக்கும்பொழுது, அவனது தந்தையார் குடும்பத்தோடு வியன்னா நகருக்கு வந்து குடியேறினார். பெரூட் நல்ல கல்விப் பயிற்சியைப் பெற வியன்னாவில் வாய்ப்பு ஏற்பட்டது. பள்ளியில் எல்லா வகுப்புக்களிலுமே முதல் மாணவனாகச் சிறந்து விளங்கினான். மிகுந்த ஆர்வத்தோடு வியன்னாப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். அப்போது மருத்துவப் பகுதியில் வியன்னா பல்கலைக்கழகம் சிறந்ததொரு இடமாகத் திகழ்ந்தது. பெரூடின் பிற்கால ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் ஏற்ற அடித்தளமாக வியன்னா மருத்துவக்கல்லூரி அளித்த பயிற்சி அமைந்திருந்தது. 1881-ஆம் ஆண்டில் பெருட் திறன்பெற்ற மருத்துவர் என்ற தகுதியைப் பெற்றார். மாணவராக இருக்கும்போது புரூக் (Brucke) என்ற பேராசிரியரின்கீழ் உடற்கூற்றியல் ஆராய்ச்சிச் சாலையிலும், பின் மெய்னெர்ட் (Meynert) என்பவரின்கீழ் மூளை அமைப்புக்கான ஆராய்ச்சிக் கழகத்தி லும், இவர் பணியாற்றி வந்தார் (1876-1882) 1884- ஆம் ஆண்டில், அரசாங்க மருத்துவ விடுதியில் உதவி யாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, பெரூட் ஒரு