முக்கியமான 173 கண்டுபிடிப்புக்குக் காரணமானவராகத் தோன்றத் தவறிவிட்டார். கோகோ (Coco) என்ற செடியின் சாற்றை வைத்து ஆராய்ச்சி செய்தபோது, அது உடலில் பட்ட இடத்தில் உணர்ச்சியை அடக்கி மரத்துப்போகும் தன்மையை வெளியிடுவதைக் கண்டு, பெரூட் அதுபற்றி ஒரு குறிப்புத் தயாரித்து வைத்தார். ஆனால் அவர் மேற்கொண்டு ஆராயவில்லை. அந்தக் குறிப்பைக் கண்டு, அவரது நண்பர் ஒருவர் மேலும் ஆராய்ந்து, கோகெயின் (Cocain) என்ற, கண், காது, மூக்கு முதலிய புலனுறுப்புகளின் ரண சிகிச்சைக்கு பெரிதும் உதவும், மரத்துப்போகும் மருந்தைக் கண்டு பிடித் தார். பெரூட் அதைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார். 1885-ஆம் ஆண்டில் பெரூட் பாரிசுக்குச் சென்று, சார்கட் (Charcot) என்ற உளநோய் மருத்துவரிடம் சேர்ந்து, அவரது மருத்துவ முறையைக் கவனித்தார். சார்கட் இப்னாடிச் முறைகொண்டு சிலவகை உளநோய்களைக் குணப்படுத்தி வந்தார். இப்னாடிச முறையில் பயிற்சி பெற்றதோடு, சார் கட்டிடமிருந்து ஒரு புதிய கருத்தையும் தெரிந்துகொண்டார். ஒரு குறிப்பிட்ட கருத்துக்களை ஒருவரின் மனத்திலே புகுத்தி, அவரிடத்தில் நரம்புத் தளர்ச்சி மயக்கநோயை உண்டாக்கலாம் என்று, ஒருமுறை சார்கட் கூறினார். க வியன்னா திரும்பியதும், தான் கற்ற இப்னாடிச முறை கொண்டு உளநோய்களைக் குணப்படுத்த முயன்றார்,பெரூட். இப்னாடிச முறையில் மருத்துவர்களுக்கு இருந்த நம்பிக்கையை விட மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது. பெரூடின் விடுதியில் கூட்டம் பெருகியது. ஆனால் இப்னாடிச முறை நல்ல வெற்றியை அளிக்கவில்லை. பெரூஃ இப்னாடிச் முறையைக் கைவிட்டு, வேறொரு முறைக்கான ஆராய்ச்சியில் இறங்கினார். பாரிசுக்குச் சென்று திரும்பிய மறு ஆண்டு,1886இல், பெரூட் ஆம்பர்க் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்து கொண்டார், பெரூடின் குடும்பவாழ்க்கை கடைசிவரை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/175
Appearance