174 அவருக்கு மூன்று மகிழ்ச்சி நிரம்பியதாகவே இருந்தது. பிள்ளைகளும் மூன்று பெண்களும் பிறந்தனர். 1889ஆம் ஆண்டில் பெரூட் நான்சி என்ற நகருக்குச் சென் றார். அங்கு பெர்ன்கீம் (Bernheim) என்ற பேராசிரியரின் இப்னாடிச ஆராய்ச்சிகளைக் கவனித்தார். அவரது ஆராய்ச்சி களில் ஒரு சம்பவம் பெரூடை மிகவும் கவர்ந்தது. ஒரு நோயாளி, இப்னாடிச உறக்கத்திலிருந்து விழித்த போது, பெர்ன்கீம் இப்னாடிச நேரத்தின்போது நடந்த உரை யாடலைக் கூறுமாறு சொன்னார். நோயாளி தனக்கு ஒன்றும் நினைவில்லை என்று கூறினார். என்று கூறினார். ஆனால் பெர்ன்கீம் விட வில்லை. நோயாளியால் முடியும், கட்டாயம் கூறவேண்டும் என்று வற்புறுத்தினார். அதன்பிறகு நோயாளி ஏதோ கூற ஆரம்பித்தார். முதலில் தெளிவில்லாமல், பின் கொஞ்சம் சரியாக, கடைசியில் இப்னாடிச நேரத்தில் நடந்த உரை யாடலைத் தெளிவாகக் கூறினார். . நோயாளியின் மனத்தில் உரையாடலைப் பற்றிய அறிவு உறைந்திருந்தும், அவை உணர்வற்ற மனநிலையில் மறைந் திருந்தது. அதை உணர்வுள்ள மனநிலைக்குக் கொணர ஒரு நூதன முறையைக் கையாள வேண்டியதாயிற்று. இந்த நிகழ்ச்சியின் ஆராய்ச்சியிலிருந்து, "திறன்பெற்ற ஒருமனச் செயல் முறை இருக்கவேண்டும்; எனினும் அது மனிதனின் உணர்வுள்ள மனநிலையினின்றும் மறைக்கப் பட்டுப் பின்தங்கிக் கிடக்கின்றது" என்று பெரூட் அறிந்தார். இந்தக் கருத்தில் உறுதிகண்டு வெற்றிகாண பெரூடுக்கு வெகு நாள் பிடிக்கவில்லை. பெரூடின் மனஅமைப்பு ஆராய்ச்சிக்குத் தக்க துணை யாகத் தொன்றியவர்கள் மூவராவர். முதலாவதாக புரூய ராகும்; 1880-86இல் புரூபருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்த தில் கண்ட உண்மைகளைப்பற்றி முன்பே குறிப்பிட்டோம். இரண்டாவதாக பாரிஸ்நகர உளநோய் மருத்துவர் சார்கட்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/176
Appearance