175 கூறிய அனுபவங்கள் பெரூடுக்கு பெரிதும் உதவியாக இருந்தன. கடைசியாக, பெர்ன்கீமின் ஆராய்ச்சிகள் பெரூடை மளநிலை பற்றிய புதிய கருத்துக்களைக் காணத் தூண்டியது. இந்த மூவருடன் கொண்ட தொடர்பினால், பெரூட் தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார். 1893இல் புரூயருடன் சேர்ந்து செய்த ஆராய்ச்சிகளை விளக்கி, நரம்புத்தளர்ச்சி மயக்க நோயின் உள இயல் அமைப்பு (On the Psychical Mechanism of Hysterical Phenomeno) என்ற நூலை வெளி யிட்டார். இரண்டாண்டுகளுக்குப்பின் வெளிவந்த நரம்புத் தளர்ச்சி மயக்க நோயாராய்ச்சி (Studies on Hysteria) என்ற நூலில், பெரூடின் உளக்கூறுபாடு (Psycho-Analysis) கொள்கை பற்றிய முதல் குறிப்புகள் காணப்பட்டன. லாம். உளக்கூறுபாடு என்பதற்கு மூன்று வழிகளில் பொருள் கூற முதலாவதாக அது, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களில் ஒன்றாகிய, அதாவது நரம்புத்தளர்ச்சி மயக்க நோயைக் குணப் படுத்தவல்ல மருத்துவ முறையாகும். இரண்டாவதாக, அது பொதுவாக மன அமைப்பின் இயல்பையும், முக்கியமாக உணர் வற்ற மனநிலையின் அமைப்பையும் ஆராயக் கொள்ளப்படும் முறையாகும். கடைசியாக அது, பல ஆராய்ச்சிகளின் முடிவாக பெரூட் வகுத்த மனத்தின் இயற்கைத் தன்மைபற்றிய கொள்கையாகும். பெரூட் மனத்தின் செயல்முறையை மூன்று விதங்களாகப் பிரிக்கிறார். உணர்வுள்ள (Concious), முன்னுணர்வுள்ள (Preconcious), zmiany (Unconcious) GTGT MI LOGITA ma மூன்று வகைப்படும். உணர்வுள்ள மனநிலையின் செயல் முறைகள் எப்போதும் தெரியக்கூடியதாகும். முன்னுணர்வுள்ள மனநிலையின் செயல்முறைகள், உணர்வுள்ள மனநிலையின் ஓரத்தே மறைந்திருந்து, எப்போதாவது உணர்வுள்ள நிலைக்கு மாறும். உணர்வற்ற மனநிலையின் செயல்முறை களைத் தெரிந்துகொள்ள முடியாது; எளிதான வகையில் அவைகள் உணர்வுள்ள மனநிலைக்கு வெளிப்படாது. மன்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/177
Appearance