176 எல்லா மனச்செயல்களும் உணர்வற்ற மனத்திலிருந்துதான் தோன்றுகின்றன. சில செயல்கள் உணர்வுள்ள மன மனத்திற்கு வரும்வரை வளர்ச்சி பெற்றுக்கொண்டே வருகின்றன. சில செயல்கள் முன்னுணர்வுள்ள மனம்வரை வந்து நின்றுவிடுகின் றன். மூன்றா வதுவகைச் செயல்கள், உணர்வற்ற மனத்திலேயே புதைந்து கிடக்கின்றன. மனம் எண்ணங்களைத் தன்னகத்தே கொள்ள மறுக்கமுடி யாது. ஆனால் எண்ணங்கள் முன்னுணர்வுள்ள உணர்வுள்ள மனங்களுக்குள் புகுவதை மனம் கட்டுப்படுத்த முடியும். அதை மனம் செய்கிறது. எண்ணங்களைப் பொறுக்கித் தேர்ந் தெடுக்கும் இந்த இயக்கத்திற்குப் பெரூட் 'குறைகாண் இயக்கம் (Censor) என்று பெயர் கொடுத்தார். குறைகாணியக்கம் உணர்வற்ற மனத்திலிருக்கும் விரும்பத்தக்க எண்ணங்களை முன்னுணர்வுள்ள மனத்திற்குள் புகாதவாறு தடுக்கின்றது. உணர்வற்ற மனத்தில் ஆதிகால இயல்பான உணர்ச்சித் தூண்டுதல்கள் அடங்கியிருக்கின்றன. பெரூட் இதை இட் (It—அது) என்றழைத்தார். உணர்வுள்ள மனத்தில் அடங்கி யிருக்கும் எண்ணங்களை எகோ (Ego--நான்) என்றழைத் தார். உணர்வுள்ள மனம் உணர்வற்ற மனத்தின் விருப்பங் களைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது, உணர்வுள்ள மனம் சமூக விதிகளை அறிந்துள்ளதாகையால் உணர்வற்ற மனத்தின் விருப்பங்கள் நிறைவேற்றக் கூடியனவா என்று தீர்மானிக் கின்றது. இப்படித் தீர்மானிக்கும் தன்மையை 'சூப்பர் எகோ' (Super-ego) என்றழைத்தார். இந்த மூன்றுவித அமைப்புகளிடையே முரண்பாடு நேர்ந் தால், மூளைக்கோளாறு ஏற்பட்டு, மனோவியாதி உண்டாகக் காரணமாகின்றது என்றும் பெரூட் கூறினார். இன்று எல்லா உளநோய் வல்லுநர்களும் இதை ஒப்புக்கொள்ளுகின்றனர். பெரூட், மனிதன் காணும் கனவுகளைப் பற்றியும் தனது ஆராய்ச்சியை செலுத்தினார். அவை எங்கிருந்து வருகின்றன?
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/178
Appearance