177 ஏன் வருகின்றன? பன்னெடுங்காலமாக வழங்கிவந்த கொள் கைகள் அவருக்குத் தெளிவைத் தரவில்லை. மனத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் உறுதி கண்டவுடன் கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார். அவர் கனவுகளைப்பற்றிய தனது ஆராய்ச்சிகளையும் கொள்கைகளையும் விளக்கி 1900-ஆம் ஆண்டில் ஒரு நூல் வெளியிட்டார். அவரது கொள்கை புரட்சிகரமாக இருந்தது. அதுவரை மக்கள் கனவுகளைப் பற்றிக்கொண்டிருந்த மூடக்கொள்கைகளை நன்றாக விளக் கிற்று. கனவுகள், உணர்வற்ற மன விருப்பங்களின் உருவகச் செயல்களாகத் தோன்றுகின்றன. நேரடியாக உணர்வுள்ள மனத்திற்குள் அனுப்பமுடியாத விருப்பங்களை, உருவகங்களின் மூலமாக,குறைகாண் இயக்கத்தையும் ஏமாற்றி, உணர்வுள்ள மனத்தில், தூங்கும்போது உணர்வற்ற மனம் தெரிவிக்கின்றது. இதை இன்று எல்லா உளநோய் லுக ஒப்புக்கொள் கின்றனர். மிகவும் துன்பங்களைத் தரவல்ல எண்ணங்களையும் துயரங்களையும், மக்கள் உணர்வுள்ள மனத்தில் வைத்துக் கொள்ள முடியாமல், உணர்வற்ற மனத்திற்குள் தள்ளிப் புதைக்கின்றனர் என்று பெரூட் கூறினார். . குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அனுபவங்கள், வாழ்க்கை யில் கடைசிவரை ஆதிக்கம் செலுத்தும் என்பதை ஆராய்ச்சி களின் மூலம் நிரூபித்து, குழந்தையிலேயே மனிதன் மனிதனா' கிறான் என்றார். பெரூட் வெளியிட்ட கொள்கைகளில் இரண்டை எதிர்த்துக் கருத்துக்கள் வழங்கப்பட்டன. "மனிதர்கள் கடைசி முடிவில் கெடுதலைச் செய்கிறவர்களாகவும், நரம்புத்தளர்ச்சி நோயுடை யவர்களாகவும் ஆகிவிடுவார்கள்" என்று பெரூட் கூறினார். "சமூகம், மக்களை அவர்களது உணர்வற்ற மன விருப்பங் நிறைவேற்றிக்கொள்ள இடந்தராது. நம்மிடத்தில் உணர்வற்ற மனவிருப்பங்கள் இருக்கின்றன. அவைகளை களை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/179
Appearance