உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மாறும். வேலைக்காரனை அழைக்கும்போது குழைவு இருக் காது; அதட்டும் அதிகார ஓசைதான் இருக்கும். அவனது முகத்தில் மலர்ச்சியான மெய்ப்பாடு தோன்றாது. சினத்தை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள் தோன்றும். இரு கை நீட்டி அழைத்து வரவேற்கமாட்டான்; ஒரு கையால் அசைவு காட்டி ஆணையிடுவான். அவனே அவனது நண்பன் ஒருவனை வரவேற்பதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது 'வா' என்ற இயலோடு சேரும் இசையும், மெய்ப்பாடுகளும் வேறுவிதமாக அமையும். நண்பனை அழைக்கும்போது, 'வா' என்ற சொல்லில் அன்பு இருக்கும். குழந்தையிடம் காட்டிய குழைவு இருக்காது; வேலைக்காரனிடம் காட்டிய அதிகாரத் தன்மையும் இருக்காது. முகத்திலே புன்சிரிப்புத் தவழும். நண்பனை இரு கைகூப்பி வரவேற்பான். நண்பனை அழைக்கும்போது, 'வா' என்ற சொல்லோடு சேரும் இசையும் மாறுபடும்; நடிப்பும் வேறுபடும். அவனே தன் அன்பு மனைவியை 'வா' என்று அழைப்ப தாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது அவனது ஓசையில் அதாவது இசையிலே மாற்றம் ஏற்படுவதையும், மெய்ப்பாடு களில் அதாவது நடிப்பிலே மாற்றம் ஏற்படுவதையும் காண லாம். அவன் மனைவியை 'வா' என்று அழைக்கும்போது அந்தச் சொல்லில் கனிவு, பணிவு, குழைவு, காதலன்பு எல்லாம் மிளிரும். அவனது கண்களிலே அன்புஒளி ஒளிரும். முகம் அன்றலர்ந்த செந்தாமரையாக மலரும்; பற்களெல் லாம் வெளியே தெரிய ஏக்கச் சிரிப்பு இருக்கும்; உடல் முழுவதும் வளையும்,நெளியும், கால்கள் நிலை தடுமாறும், கைகள் மனைவியைக் கட்டி அணைக்க எட்டி நீளும். இப்படி யாக மெய்ப்பாடுகள் முற்றிலும் மாறும். 'வா' என்ற இயற்சொல், குழந்தை - வேலைக்காரன்- நண்பன்- மனைவி ஆகியோரை அழைக்க முற்படும்போது, இடம்-பொருள்-ஏவலுக்கு ஏற்ப, இசைத்தன்மையையும்