178 அழிக்க முடியாது. ஆகவே, கடைசியில் முடிவும் கொடூரமாகத் தான் இருக்கும். ஆனால் அந்த விருப்பங்களை அடக்கிப் போராடாமல், ஒருவகை வழியைத் தேடிக்கொண்டு வாழ முற்படலாம். அதுதான் பொதுவாகச் சிறந்த வழி. பெரூடின் இக் கருத்தைப் பல உளநோய் வல்லுநர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். உணர்வற்ற மனவிரு ப்பங்கள், சமூக விதி களுக்கு விரோதம் என்ற இன்றியமையாமை இல்லை; எந்த விதத்திலும் மாற்றிக்கொள்ளமுடியும் என்று வாதிடுகின்றனர். பெரூட் வெளியிட்ட மற்றொரு கொள்கை பற்றியும் அதிகமான கருத்து வேறுபாடுகள் தோன்றின. உணர்வற்ற மனத்தில் உறைந்து கிடைகுக்ம் விருப்பங்கள் சிற்றின்ப உணர்ச்சியைக் (Libids) கொண்டதாக இருக்கின்றன வென்றும், உணர்வற்ற மனம் அதை நிறைவேற்ற பாடுபடுகிற தென்றும் கூறினார். இதை வன்மையாக யாவரும் கண்டிக்க முற்பட்டனர். பின்னர் பெரூட் தான் கூறிய சிற்றின்ப உணர்ச்சி என்ற சொல்லுக்கு விளக்கம் கூறினார்.இன்பந் தேடும் எந்த உணர்ச்சியையும் நல்ல உணவின் விருப்பத்தி லிருந்து கேட்டு மகிழும் இசைவரை - குறிக்கும் சொல்லாக அது கூறப்பட்டிருக்கிற தென்றார். முதலில் குறிப்பிடும்போது பெரூட் சிற்றின்ப உணர்ச்சியை மட்டுந்தான் குறிப்பிட்டார். அனேகமாக பல நரம்புத் தளர்ச்சி நோய்கள் ஏற்பட, நிறைவேற்றப்படாத, நிறை இயலாத சிற்றின்ப விருப்பங்களே அடிப்படைக் வேற்ற காரணமாகின்றன என்றார். சிற்றின்பத் தூண்டுதலும், பிறவகை இன்பந்தேடும் உணர்ச்சிகளும், உரிமை கொள்ளுதல் உருவாக்குதல் போன்ற உணர்ச்சித் தூண்டல்களும், வாழ்க்கையில் முக்கிய உளஇயல் சக்திகளாக அமைகின்றன என்று, இன்றைய உளநோய் வல்லுநர்கள் கருதுகின்றனர். நரம்புத் தளர்ச்சி நோயுடையவர்களைக் குணப்படுத்த இப்னாடிச முறை பயன்படாதபோது, பெரூட் ஒரு புதுமுறை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/180
Appearance