179 யைக் கண்டுபிடித்தார். நோயாளியின் உணர்வற்ற மனத்தி லிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்த 'உளக்கூறுபாட் டறிஞனின் நாற்காலி' (Psycho Analyst's Couch) என்ற வழியை ஏற்படுத்தினார். மருத்துவ வரலாற்றில்,அது ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. நோயாளியின் மனத்தைத் திருப்பக்கூடிய சூழ்நிலை அமைந்த ஒரு அறையில், ஒரு நாற்காலி இருக்கும். உளக்கூறு பாட்டறிஞர் நோயாளியை அந்த நாற்காலியில் ட்கார வைத்து ஆராய்வார். இதற்குத்தான் 'உளக்கூறுபாட்டறிஞ னின் நாற்காலி' முறை என்று பெயர். என்றாலும், இம்முறை எல்லா நோயாளிகளிடத்திலும் பயனளிப்பதில்லை. இதற்கு ஆகும் செலவும் நேரமும் அதிகமாகும். சில நோயாளிகளுக்கு ஆண்டுக்கணக்கில்கூட சிகிச்சை நடைபெறவேண்டியிருக்கும். தற்பொழுது பொறுக்கி எடுக்கப்பட்ட ஒரு சிலர்தான் இம்முறையின்மூலம் முழுச் சிகிச்சை பெறுகின்றனர். பெரூடின் முறைகளும், கண்டுபிடிப்புகளும் தோன்றா விட்டால், சிக்கல்கள் நிறைந்த மன அமைப்பைப்பற்றி நாம் சிறிதுகூடத் தெரிந்துகொண்டிருக்க முடியாது. சு பெரூட் வியன்னா நகரத்திலேயே, தனது ஆராய்ச்சிகளை நடத்திக்கொண்டும், அதைப்பற்றி எழுதிக்கொண்டும் தனது பிற்கால வாழ்க்கையைக் கழித்தார். க்கூறுபாடு முறை ஆராய்ச்சியில் பத்து ஆண்டுகள்வரை தனியாக உழைத்தார். 1906ஆம் ஆண்டில்தான் பல ஆராய்ச்சியாளர்கள் அவருடன் சேர்ந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் ஆல்டர் (Alder), பிரில் (Brill), பெரன்சி (Ferenzi), ஏனஸ்ட் ஜோன்ஸ் (Ernest Jones), ஜங் (Jung), சாட்கெர் (Sadger), ஸ்டெகல் (Stekal) முதலியோர் ஆவர். இவர்களின் கூட்டு முயற்சியால், 1908ஆம் ஆண்டில், முதலாவது உளக்கூறுபாட்டறிஞர்களின் மாநாடு நடைபெற்றுக் உளக்கூறுபாட்டுக் கழகமும் தோன்றியது. இன்று உலகெங்கும் அக்கழகம் பரவியிருக்கிறது.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/181
Appearance