இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
180 பெரூட் ஒரு யூதன் என்பதற்காக நாசிப் படையினர் 1933இல் அவரது புத்தகங்களைக் கொளுத்தினர். 1938இல் அவர் வியன்னாவைவிட்டு வெளியேறுமாறு வற்புறுத்தப்பட்டு, லண்டன் மாநகருக்கு வந்து சேர்ந்தார். பெரூட் 1939ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 23ம் நாள், இங்லஸ்டெட் நகரில், தனது மகன் இல்லத்தில், தம் 83வது வயதில் உயிர் துறந்தார். பெரூடின் கொள்கைகளில் சிலவற்றிற்குத் தற்பொழுது கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், வருங்காலத்தில் அவரது கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் புலனாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அறிவியல் துறையில் ஒரு புதிய பாதை வகுத்த சைமன் பெரூட் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் அறிஞர்களில் ஒருவராவார்.