24. அறிஞர் கார்வர் "வீல் வீல்" என்ற சத்தம். ஆறுமாதங்கூட நிரம்பாத பச்சிளங் குழந்தை வேதனையால் துடிதுடித்துக் கொண் டிருந்தது. பக்கத்திலிருந்த நாலைந்து முரடர்கள், குழந்தை அழுவதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதைக் கவனித்தவருக்குக் குழந்தைமீது இரக்கமும், கயவர் கள்மீது கோபமும் உண்டானது. அலைந்து திரியும் வழிப் போக்கர்களிடம் ஆறுமாதக் குழந்தை காணப்பட்டது ஆச்சரியமாயிருந்தது. "உயிர் போய்விடும்போல் குழந்தை பேசாமல் வேடிக்கை பார்க்கிறீர்களே! துடிதுடிக்கிறது. அவரை முறைத்துப் பார்த்துவிட்டு, முரடர்கள் வேறு பக்கம் திரும்பினார்கள். "அநியாயமாக இருக்கிறதே! கத்திக் கத்தித் தொண்டை கம்மிவிட்டது. கைக்குழந்தையைச் சமாதானப்படுத்தாமல், கல்நெஞ்சினராய் வேறு திக்கு நோக்கி நிற்கிறீர்களே? குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லையா?" "உனக்கு வேறு வேலை யில்லையா?" "வேலையில்லாத வெட்டியல்ல. வெளியில் வேண்டிய வேலைகள் இருக்கின்றன. அத்துடன் நெஞ்சில் இரக்கமும் இருக்கிறது. நீக்ரோக் குழந்தை, பார்ப்பதற்கு அழகாயில்லை. அதற்காகக் குழந்தையை இறக்கும்படி கவனிப்பின்றி விடுவது தகாது."
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/183
Appearance