உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும், மற்றக் குறிப்புக் களும் அவர்கள் கொலை கொள்ளை எதற்கும் அஞ்சா தவர்கள் என்பதைக் காட்டின. உண்மையில், அவர்கள் கொலை, கொள்ளை இவைகளால் வாழ்பவர்களே. குழந்தை அழுவதைப் பார்த்தவர் குழந்தையைச் சமாதானப்படுத்த அருகே போனார். "குழந்தையைத் தொடாதே." "அழுகிறதே, சமாதானப்படுத்துகிறேன்.' குழந்தை உனக்கு வேண்டுமானால் எடுத்துப்போ. குழந்தையா! நான் எடுத்துபோகலாமா? "பொறு, அவசரப்படாதே! எவ்வளவு பணம் கொடுப்பாய்?" குழந்தைக்குப் பதில் "கைக்குழந்தையைக் காசுக்கு விற்கத் துணிந்துவிட்டீர் களா? எவ்வளவு கல்நெஞ்சு! காசு இருந்தால் பேசு, இல்லாவிட்டால் போ.' குழந்தை இவர்களிடத்திலிருந்தால் இறந்துதான் போகும். பரிதாபமாயிருக்கிறது."ஐயா! என் செய்வேன், என்னிடம் பணம் கிடையாதே! வேறு ஏதாவது கேளுங்கள் தருகிறேன்.' "தரித்திரமே! உன்னிடம் என்னதான் இருக்கிறது?" "அதோ மேய்கிற குதிரை உங்களுக்கு வேண்டுமா?" என்னுடையதுதான். கொள்ளைக் காரர்களுக்குக் குதிரை என்றால் பிரியம் அதிகம். குழந்தைக்குப் பதில் குதிரையை எடுத்துக்கொள்ள ஒப்புக் கொண்டனர். "ஓட்டப் பந்தயங்களில் ஓடிய குதிரை. ஆனால் கால் நொண்டியாகிவிட்டது. பாதகமில்லை. நோஞ்சல் குழந்தைக்கு நொண்டிக் குதிரை மேல்" என்றனர்.