183 பண்டமாற்று நடந்தது. நொண்டிக் குதிரையுடன் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் போனார்கள். ஆறுமாதக் குழந்தையுடன் குதிரையின் சொந்தக்காரன் திரும்பினான். குழந்தை விற்கப்பட்டது கதையல்ல; அமெரிக்காவில் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த சம்பவம். இரக்க நெஞ்சினன் பார்க்காதிருந்தால், குழந்தை இறந்திருக்கும்; நொண்டிக்குதிரையும் கைமாறி யிருக்காது. குழந்தை இறந்திருக்கும், கொள்ளைக்கார்கள் சவத்தை விட்டுப் போயிருப்பார்கள். கழுகால் சிதைக்கப்பட்டு, எலும்புக்கூடு தோன்றி, பின் அலைக்கப்பட்டு, சிதறி மறைந் திருக்கும்.குதிரை கொடுத்தவன்கூட, குழந்தையை வாங்கா திருந்தால் சிறிது காலத்தில் மறந்திருப்பான். சிறு குழந்தை கவனிக்கப்படாது இறந்திருந்தால், பெரும் அறிஞனை, சிறந்த ஆராய்ச்சியாளனை, உயர்ந்த விஞ்ஞானியை, இந்த உலகமும் இழந்திருக்கும். கார்வர்! அந்தப் பெயர் விஞ்ஞான உலகில் ஒளிவிட் டிருக்காது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்கா வில் உள்நாட்டுக் கலகம் மூண்டது. அடிமை முறை ஒழிய வேண்டுமென்று வடக்கு அமெரிக்க நாடுகள் ஆரவாரித்தன. அடிமை முறையை அதற்ற முடியாதென்று தெற்கு நாடுகள் எதிர்த்தன. வடக்கு நாடுகளில் தொழில்முறை வளர்ந்து சமத்துவ நோக்கம் நோக்கம் பரவியிருந்தது. தெற்கு நாடுகளில் நீக்ரோ வகுப்பினர் அடிமைப் பண்ணைகளில் உழன்றனர். இரண்டு பகுதிக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை பெரும் போராட்டமாக மாறியது. கடுமையானப் பேச்சு, கலகம் இவை முற்றி, உள்நாட்டுச் சண்டைக்கருகில் நின்றது. இந்த நிலையில் ஆபிரஹாம் லிங்கன் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/185
Appearance