உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 அடிமை முறையை ஒழித்துக் கட்டுவதில் லிங்கன் உறுதி யாயிருந்தார். அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தென் ஐக்கிய நாடுகள் போர் தொடுத்தன. நேர்மை, கொள்கை, மனிதாபிமானம், விடுதலை உணர்ச்சி, இவை களுக்காக வடக்குநாடுகள் போராடின. பிற்போக்கு, பழமை, அடக்குமுறை, ஆதிக்கவெறி இவைகளைக் காப்பாற்றத் தெற்குநாடுகள் போரிட்டன. ஆரம்பத்தில் வடக்கு நாடுகள் படைபலமற்றிருந்த போதிலும், சிறுகச்சிறுக பலம் வளர்ந்தது. ஆயிரக்கணக்கிலிருந்த படைவீரர் பெருகி, பத்து லட்சத்துக்கு மேற்பட்ட வீரர்கள் லிங்கன் படையில் திரண்டனர். தெற்கு நாடுகளோ, ஆதிமுதல் வளர்த்துவந்த படை வரிசைகளை ஆங்கில, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் உதவியுடன் களத்தில் நிறுத்தின. ஆயிரக்கணகான மைல் தூரத்துக்குப் போர்க்களம் விரிந்திருந்தது. நாடு ரணகளமாகியது. "இருப் பதா இறப்பதா?" என்ற போராட்டத்தில் கடைசிவரைப் போராட இரு நாடுகளும் பின் வாங்கவில்லை. நான்கு ஆண்டுகளாகியும் சண்டை முடிவுக்கு வரவில்லை. . . அடிமைகளின் கதி தராசு முனையில் நின்றது. வடக்கு நாடுகளுக்கு வெற்றி-விடுதலை. தெற்கு நாடுகளுக்கு வெற்றி அடிமைமுறை. 1864ஆம் ஆண்டில் சண்டையின் போக்கை மாற்றி அமைக்கும் விதத்தில் உறுதியான வெற்றியொன்று வடக்கு நாடுகளுக்குக் கிடைத்தது. விடுதலை வெற்றிபெற்றது. லிங்கன் வெற்றி பெற்றார். அடிமைகள் ஆரவாரித்தனர். போராட்டம் மிகுந்த, பெருமைமிக்க அந்த ஆண்டில்தான் கார்வர் பிறந்தார். அடிமைகளுக்கு விடுதலையையும், அமெரிக்காவுக்கு நற்பெயரையும் சண்டையின் வெற்றி கொடுத்தது. நீக்ரோ நீக்ரோ வகுப்பினருக்குப் பெருமையையும் அமெரிக்காவுக்கு வளத்தையும் கார்வர் கொடுத்தார். தம் இடைவிடாத உழைப்பால், போராட்டத்தைப் போர்க்களத் திலல்ல, ஆய்வுக்களத்தில் நடத்தினார். சண்டையில் கிடைத்த வெற்றிகளைவிட, அவர் கொடுத்த வெற்றியே வாழ்க்கையை வளம் படுத்திற்று.