உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 தெற்கு நாடுகளில் ஒன்றான மிசௌரியிலுள்ள டைமண்ட் குரோவ் என்ற ஊருக்கருகில் 1864இல் கார்வர் பிறந்தார். அவருடைய பெற்றோர் அடிமை நீக்ரோ வகுப்பினர். குழந்தை பிறந்த கொஞ்ச காலத்துக்குள் தந்தை இறந்தார். ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்பொழுது, தாயும் சேயும் வழிப்பறிக் கொள்ளைகாரர்களால் தூக்கிச் செல்லப்பட்டனர். நொண்டிக் குதிரைக்குப் பதில் ஆறு மாதக் குழந்தை வாங்கப்பட்டது. தாய் என்ன ஆனாள் என்று எவருக்குமே தெரியாது. தாய், தந்தையர் யாரென்று கார்வருக்குத் தெரியவே இல்லை. கண்டுபிடிக்கப்படவுமில்லை. 1865இல் அடிமை முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. அப்பொழுது மோசசு கார்வர்' என்ற வெள்ளை முதலாளி, அனாதையான சிறு குழந்தையைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டார். அங்கு வளரும் பொழுதுதான் குழந்தைக்கு அக் குடும்பப் பெயரான கார்வர் என்ற பெயர் ஏற்பட்டது. குடும்ப வேலைகளைச் செய்வதற்கு அவர் வளர்க்கப்பட்டார். • கல்வி கற்க வேண்டுமென்ற ஆசை சிறுவயதிலேயே உண்டானது. அடிமையின் மகன் நீக்ரோ வகுப்பினன், அனாதை, ஏழை, இந்த நிலையில் கார்வரால் எளிதில் கல்வி பெற முடியவில்லை. தன்னையே நம்பி, தன் வாழ்க்கையைத் திருத்திக்கொள்ளக் கார்வர் வெளிக்கிளம்பினார். பண்ணைக் குப் பண்ணை அலைந்து கூலிவேலை செய்து வயிறு வளர்த் தார். இரவு வேளைகளில் வயலோரத்திலும், வைக்கோற் பரப்பிலும் உறங்கினார். தொல்லையும், நிலையற்ற வாழ்க்கையும் அதிகரித்த போதிலும் கல்வி கற்க வேண்டு மென்ற ஆசை கருகவில்லை. பின் ஒருவர் வீட்டில் வேலைக்கமர்ந்து, அவர்களிட்ட வேலைகளனைத்தையும் செய்து, அச் சிற்றூரிலிருந்த ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார். ஆரம்பக் கல்வி முடிந்ததும் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். உணவு, உடை, படிப்புச் அ.12