186 செலவு முதலியவைகளைச் சமாளிக்க, துணிகளை வெளுக்கும் தொழிலில் ஈடுபட்டார். படிப்பு நேரம் முடிந்ததும், அழுக்குத் துணிகளை எடுத்துவந்து வெளுத்துக் கொடுத்து, அதனால் வரும் வருவாயால், தன் படிப்பை முடித்தார். L உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றதும், கல்லூரிக்குப் போகத் தயாரானார். படிப்பு உயர்ந்ததுபோலவே, கைத் தொழில் முறையும் உயர்ந்தது. சிறிய சலவைச்சாலை (லாண்டரி) உண்டாக்கி, அதில் வேலைசெய்து, அதனால் வரும் கூலியைக் கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தார். எந்த வேலை கிடைத்தாலும் தயங்காது செய்து முடித்து, அன்றாடக் கூலி வாழ்வினராக மூன்று ஆண்டுகள் கல்லூரியில் படித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் உழவுத்தொழில் ஆராய்ச்சிக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படித்தார். சிறுவயதிலிருந்தே பண்ணைத் தொழிலும், செடிகொடிகள் வளர்ச்சியும் நன்றாகத் தெரிந்திருந்ததால், உழவுமுறைக் கல்லூரியில் கார்வர் சிறந்தவராக விளங்கினார். ய உயர்தரப் படிப்பு முடிந்ததும் 1896இல் அலபாமா பகுதியி லுள்ள டச்கிச் என்ற இடத்துக்குப் போனார். அங்குப் புதிதாகத் துவக்கப்பட்ட ஆராய்ச்சிக் கழகத்தில் சேர்ந்தார். உழவுமுறை பற்றி ஆராய்ச்சி செய்து, புதிய முறைகளைக் கண்டுபிடிக்க எல்லா வசதிகளும் நிரம்பிய ஆய்வுக்கூடமும், புதிய முறைகள் நடைமுறையில் வெற்றி பெறுகிறதா என்பதைக் கவனிக்கப் பக்கத்தில் பண்பட்ட நிலமும், உழவுத்தொழில் ஆராய்ச்சிக்குத் தேவை. கார்வருக்குக் கிடைத்தவை காலியான சிறு கட்டிடம்; அதைச் சுற்றிக் காடாரம்பமான 16ஏக்கர் நிலம். வசதிக்குறை வால் கார்வர் என்றும் தளர்ச்சியடைந்ததில்லை. தன் முயற்சி யால் நிலத்தைப் பண்படுத்தி, ஆராய்ச்சிச் சாலையை உண் டாக்க முற்பட்டார். கார்வரும் அவரது மாணவர்களும் பக லெல்லாம் சுற்றிக் குப்பை, கூளம், சருகு, தழை, வண்டல்மண் முதலியவற்றைக் கூடையிலும், வாளியிலும் தூக்கிவந்து, ஆராய்ச்சிப் பண்ணையில் சேர்த்தார்கள். மண் கிளரப்பட்டு, உரம் கலக்கப்பட்டு, நிலம் பண்படுத்தப்பட்டது. தரிசு நிலத்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/188
Appearance