187 தைத் தயாராக்கியதும், ஆராய்ச்சிச் சாலை உண்டாக்குவதில் கார்வர் முனைந்தார். அதற்கு வேண்டிய கண்ணாடிக் குழாய்கள், நுணுக்கமான அளவுக்கருவிகள், உதவிச் சாமான் கள் முதலியவைகளைப் பெறவேண்டுமானால், வியாபாரக் கம்பனிகளில் பெரும் பொருள் கொடுத்து வாங்கவேண்டும். முடியாத காரணத்தால்.கார்வர் தானாகவே ஆய்வுச் சாமான்களைத் திரட்ட முற்பட்டார். ஊரிலிருந்த குப்பைமேடுகள் கிளரப்பட்டு, கோப்பைகள், பீங்கான், உடைந்த பாட்டில் தகரக்குவளை, மரத்துண்டுகள், அனைத்தும் சிதைந்த மைக்கூடு, சேகரிக்கப் பட்டன; மற்றவர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட பொருள்கள் காரவர் ஆராய்ச்சிச் சாலையில் ஆய்வுச் சாமான்களாக மாறின. கொலம்பசின் பயணம்போல், கார்வரின் ஆராய்ச்சி ஆரம்பமாயிற்று. களிமண் நிரம்பிய அந்தப் பக்கத்து மண் அவரால் ஆராயப்பட்டது. அந்த மண்ணிலேயே அதிகமான பருத்தி விளைவைக் காட்டக்கூடிய முறையைக் கண்டுபிடித் தார். அங்கிருந்த உழவர்களுக்கு இலாபகரமான முறையை விளக்கியதுடன், எல்லோரும் பிரமிக்கத்தக்க அளவுக்குத் தன் ஆராய்ச்சிப் பண்ணையில் அளவுகடந்த பருத்தி விளைவைச் செய்தும் காட்டினார். அத்துடன் உருளைக்கிழங்கு பயிரிடும் வகையில் பலத்த மாறுதலை உண்டாக்கினார். அதுவரை ஆண்டுக்கொருமுறைதான் உருளைக்கிழங்கு விளைவு எடுக்கப் பட்டது. அதை மாற்றி, ஆண்டுக்கு இருமுறை விளைவு காணும் வகையை உழவர்களுக்கு விளக்கினார். இதனால், உழவுத் தொழில் வளமுள்ளதாகி, பாலைவனம் போன்றிருந்த நிலங் களில்கூடப் பலன்கொடுக்கும் வகையில் பயிர்த்தொழில் முறை வளர்ந்தது. "என்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இப்பக்கத்து மண் வளப்பமுடையதல்ல என்று கூறுகின்றனர். ஆனால் எனக்குக் கிடைத்தது இந்த நிலம்தான். உபயோகத் துக்கு உதவாத மண் என்று கூறவது தவறு. உபயோகப் படுத்தப்படாத மண் என்றுதான் கூறுவேண்டும்" என்று
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/189
Appearance