17 இயக்கத் தன்மையையும் மாறி மாறி வேறுவேறு விதமாகப் பெறுகின்றது. சொல்லுக்கு இசைத்தன்மையும், இயக்கத் தன்மையும் (நடிப்புத் தன்மை) வேறுபடும்போது அந்தச் சொல் உணர்த்தும் பொருளும் வேறுபடுகின்றது, எனவே, மொழிக்கு இயல் தன்மையும்-மூன்று தன்மைகள் உண்டு என்பதைக் கண்டறிந்த காரணத்தால்தான், பழந்தமிழ்ச் சான்றோர், தமிழ் மொழியை 'முத்தமிழ்' என்று அழைக்க லாயினர். கல்வியும் கலையும் - மொழி, கல்வியைத் தருகிறது; கல்வி, கலையை வளர்க் கிறது. 'கல்வி' 'கலை' என்ற இரண்டு சொற்களும் 'கல்' என்னும் பகுதியின் அடிப்படையாகத் தோன்றுகின்றன. கல்லுதல் - தோண்டுதல்-ஆழ்ந்து காணுதல் - ஆராய்தல். ஆராய்தல் என்பது, 'கல்வி', 'கலை' ஆகிய இரண்டிற்கும் அடிப்படையாக அமைந்த பண்பாகும். கற்கக்கூடியது 'கல்வி'; கற்று வளர்க்கக்கூடியது 'கலை'. கல்வியின் மூலந்தான் கலையை வளர்க்க இயலும். கல்லாமல் கலையை வளர்க்க முடியாது. 'கல்வி' என்பது பன்பு எனக் கொள்ளப்படுமே யானால், *கலை' என்பது பயனாகக் கொள்ளப்படும். அறிவியலும் கலையியலும் மாந்தனின் உருப்பெறும் உள்ளத்தே ஊறியெழுந்து கருத்துக்களை, உலகோர் இருவகையாகப் பாகுபடுத்து கின்றனர். ஒரு வகையை 'அறிவியல்' (Science) என்றும், மற்றொரு வகையை 'கலையியல்' (Art) என்றும் பிரிக்கிறார்
கலைகளுக்கெல்லாம் உயிராக அமைவது அழகாகும். அழகை ஐம்பொறிகளின் வாயிலாக உள்ளம் உணர்கிறது. அழகு என்பது உள்ளத்தால் உணரப்படுவது. அழகு என்பது உள்ளத்தே இயல்பாகத் தோன்றி எழும் உணர்ச்சி யாக அமைகிறது.