உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கார்வர் பின்னொரு முறை கூறினார். தென் ஐக்கிய அமெக்க நாடுகளில், கார்வாரின் ஆராய்ச்சிகளால் இன்றைக்கு பருத்தி, புகையிலை, உருளைக்கிழங்கு, வேர்க்கடலை முதலிய பலவும் பலன்தரும் பயிர்களாகிவிட்டன. உழவுத்தொழிலில் விளைந்த பயிர்வகைகளை ஆராய்ந்து ஒவ்வொன்றும் கணக்கிலடங்கா வழிகளில் உதவும் என்பதைக் காட்டினார். உருளைக் கிழங்கை ஆராய்ச்சிசெய்து, அதிலிருந்து மாவு, புளிப்பு ரசம், கொழுப்புப் பசை, பலவித வண்ணங்கள், உரவகைகள் முதலிய நூற்றுக்கு மேற்பட்ட பொருள்களை உண்டாக்கினார். உழவர்களால் மிகக் குறைவாகக் கருதப்பட்ட வேர்க்கடலைமீது கார்வரின் கவனஞ் சென்றது. அதிலிருந்து 300 உபயோகங்களைக் கண்டுபிடித் தார். வேர்க்கடலையிலிருந்து காப்பி, வெண்ணெய், பால் சத்து, அச்சுக்கூட மை, மாவுப் பொருள்கள், மருந்து எண்ணெய்கள், தாள் வகைகள், இயந்திரங்களுக்கு இடும் கொழுப்பு முதலியவை கார்வரால் எடுத்துக் காட்டப்பட்டன. கல்லைத் தொட்டுக் கனியை வரவழைக்கும் வேடிக்கைக் காரனைப்போல, கார்வர் பல வினோதங்களைச் செய்து முடித்த வண்ணம் இருந்தார். ய உபயோகமற்ற பொருள் - கார்வர் அகராதியில் அந்தச் சொல் கிடையாது. மற்றவர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒவ்வொன்றிலிருந்தும், நூற்றுக்கணக்கான உபயோகங்களைக் காட்டினார். தென் ஐக்கிய நாடுகளில் யைன் மரம் அதிகம் உபயோகத்துக்குப் பயன்படாதது என்று ஒதுக்கப்பட் டிருந்தது. காகிதம் செய்வதற்கு அந்த மரத்தையே உபயோகப் படுத்தலாம் என்று செய்து காட்டினார். இந்தத் தொழில்தான் இன்று தென் ஐக்கிய நாடுகளில் வளப்பமான தொழிலாகி விட்டது. மரத்தைச் செதுக்கும்பொழுது கீழேவிழுகிற மரத் துண்டுகளையும், மரச்சுருள்களையும்கூடக் கார்வர் விட வில்லை. அவற்றை செயற்கைப் பளிங்கு செய்வதில் உபயோகப் படுத்தினார். பருத்தித் தட்டைகள். வைக்கோல், மரத்தூள்