உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 இவைகளிலிருந்து பரப்புள்ள பலகைகள் செய்து காட்டினார். காட்டுப் பூக்களிலிருந்து மெல்லிய காகிதங்கள் செய்தார். 'உணவுப்பொருள்களைச் சம்பாதிப்பதில் அதிகம் கவலைப் படவேண்டியதில்லை; ஒவ்வொருவருக்கும் வேண்டிய அளவுக்குமேல், கூப்பிடு தூரத்துக்குள் படர்ந்திருக்கும் செடிகொடிகளிலேயே உணவை எடுத்துவிடலாம்" என்று கார்வர் நம்பினார். அவர் தான் சொன்னதை நிரூபிக்க ஊரில் கிடைத்த செடிகொடிகளைக் கொண்டுவரச் சொன்னார். உபயோகப்படாதென்று மதிக்கப்பட்ட செடிகளும், பாதை யோரத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த கொடிகளும், வயற் பக்கத்திலும் வேலியோரத்திலும் படந்திருந்தவைகளும் கார்வர் முன் வைக்கப்பட்டன. அவைகளைக் கொண்டு உயர்தரமான விருந்து உண்டாக்குவதில் கார்வர் ஈடுபட்டார். சுவைமிக்க சூப் வகைகள், வெண்ணெய், தித்திக்கும் தின் பண்டங்கள், இன்னும் பற்பல பண்டங்களாகச் சுவையும் சுத்தமும் குறையாதவகையில் அவற்றை மாற்றினார். தான் கண்டுபிடித்த உண்மைகளையும், புதுமுறைகளையும், அனைவருக்கும் உபயோகப்படும்படி அச்சிட்டு, நாடெங்கும் இலவசமாக வழங்கினார். கார்வரின் கருத்தைக் கவர்ந்தவர்கள் உழவர்களே. அவர் கள் நல்ல பலனடைய வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் தான், கார்வர் உணவுமுறையில் சலியாது உழைத்து, பலவித இலாப முறைகளைக் கண்டுபிடித்தார். அவற்றை உழவர் களுக்கு விளக்குவதற்காக, ஒரு வண்டியில் கண்காட்சிப் பொருள்களையும் படங்களையும் ஏற்றிக்கொண்டு, ஒரு குதிரையை இரவல் வாங்கி, கிராமந்தோறும் சுற்றினார், ஒவ்வொரு கிராமத்திலும் பயிர்த்தொழிலிலுள்ள குறைபாடு களை நீக்கும் வழியை விளக்கினார். கார்வர் கையாண்ட சுற்றுப்பிரயாண விளக்க முறை பயனளித்தது. இன்று அமெரிக்காவிலுள்ள உழவுத்தொழில் பிரசார இலாக்காவிற்கு அடிப்படையாகக் கார்வரின் சுற்றுப்பிரயாணக் கண்காட்சி முறையே அமைந்தது.