190 பொழுது போக்குக்காகக் கார்வர் ஓவியம் தீட்டுவார். அவரால் தீட்டப்பட்ட ஓவியங்களை இன்றும் மதிப்புடன் பார்க்கின்றனர். அதில்கூட கார்வர் தம் விஞ்ஞான அறிவை உபயோகப்படுத்தினார். ஓவியத்துக்கு வேண்டிய வண்ணங் களைத் தனக்குக் கிடைத்த ஒருவகைக் களிமண்ணிலிருந்து உண்டாக்கிக் கொண்டார். ஆச்சரியமானது! களிமண், அதிலிருந்து வானவில்லில் காணப்படும் வண்ணங்களை உண் டாக்கினார். மற்றொரு இடத்திலிருந்து வந்த களிமண்ணி லிருந்து துணிக்கு இடும் அழகிய சாயவண்ணங்களையும், முகத்தில் தடவிக்கொள்ளும் முகப்பவுடரையும் செய்தார். அவருடைய ஆராய்ச்சிகள் பெருகிக்கொண்டே போயின. புகழ்பெற்ற விஞ்ஞான அறிஞர் ஆல்வா எடிசன், தம்முடன் வந்து ஆராய்ச்சிகள் நடத்துமாறு அழைத்தார். அலபாமா நாட்டு உழவர்களுக்கு உபயோகமாக அவர்கள் மத்தியிலேயே வாழ விரும்பியதால், கார்வர் எடிசனின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இளம்பருவத்தில் வயிறு வளர்க்கவும், கல்வி பயிலவும் காசுக்குத் திண்டாடிய கார்வருக்குப் பணம் ஏராளமாக வந்தது. அதைப்பற்றி அவர் சிறிதுகூடக் கவலைப்படவில்லை. யார் உதவிகேட்டாலும் கைம்மாறு கருதாமல் உதவி செய்தார். உழவர்களைக் கண்டால் வலிய அழைத்து யோசனைகள் சொல்லுவார். அவருக்கு கொடுக்கப் பட்ட சம்பள செக்குகள், அவரை அறியாமலே, அவருடைய பாங்குக் கணக்கில் ஏறிக்கொண்டிருந்தன. இறந்துபோவதற்குச் சிறிது காலம் முன்வரை அப்பணத்தை அவர் உபயோகிக்கவே யில்லை. வேர்க்கடலை எண்ணெயிலிருந்து பாரிசவாதத்துக்கு உபயோகிக்கக்கூடிய மருந்து எண்ணெயைக் கண்டுபிடித்தார். உரிமை பெற்றுத் தாமே வைத்திருந்தால் கோடிக்கணக்கில் பொருள் திரட்டியிருக்கலாம். புதிய மருந்து எண்ணெயைக் கண்டுபிடித்ததும், லாபத்தைக் சருதாமல் உபயோகத்தை மதித்து மருத்துவத்துறையினருக்கு இலவசமாக வழங்கி விட்டார். பலன் தரும் மரங்களில் கேடு விளைத்த பிணியை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/192
Appearance