191 ஒழிக்கும் முறையை உற்பத்தியாளருக்குக் கண்டுபிடித்துத் தெரிவித்தார். கார்வர் முறை வெற்றியடைந்தது; அதை மெச்சி, கார்வருக்கு ஏராளமான பணத்தைச் சொந்தக்காரர் பரிசாக அனுப்பினார்கள். அதை வாங்க மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டார். மற்றொரு முறை வேர்க்கடலை மேல்தோட்டிலிருந்து செயற்கைப் பளிங்கு செய்யும் முறையை தூரத்திலிருந்த தொழிற்சாலையொன்றுக்கு அளித்தார். தொழில் முறையில் சரியாக வராததால், தொழிற்சாலையில் பெரும் பங்கு தாரராகத் தொழிற்சாலை இருக்குமிடத்துக்கு வந்துவிடும்படி கார்வரை அழைத்தனர். கார்வர் மறுத்துவிடவே, கார்வர் இருக்குமிடத்துக்கே தொழிற்சாலை மாற்றப்பட்டுவிட்டது. அவருடைய ஆலோசனையில் தொழில் நடந்தது. ஆலோசனைக்கு ஊதியம் எதுவும் பெற அவர் மறுத்துவிட்டார் என்பதைக் கூறவேண்டியதில்லை. 1939இல் விஞ்ஞானத் துறையில் சிறந்த ஆராய்ச்சியாள ராக ரூஸ்வெல்ட் பதக்கம் கார்வருக்கு அளிக்கப்பட்டது. அப்பொழுது அவருக்கு வயது எழுபத்து ஐந்து. தள்ளாத வயதிலும், அவரது ஆராய்ச்சியும் ஊக்கமும் சிறிதளவும் குறையவில்லை. தான் உழைத்த ஆராய்ச்சித்துறைகளில் மேலும் ஆராய்ச்சி நடக்கவேண்டுமென்ற பெருந்தன்மை யுடன், வாழ்நாள் பூராவும் சேர்த்த-அல்ல சேர்ந்த பணத் தைக் கொண்டு, 'ஜ்யார்ஜ் வாஷிங்டன் கார்வர் சுழகம்' என்ற முழுப்பெயரில் கழகம் ஒன்றை நிறுவினார். மூன்றாண்டுகள் கழித்து 1943 ஜனவரியில் இறந்தார். கார்வர் இறந்தார். அவர் உதவிபெற்று வளர்ந்த உ உழவர்கள் தேம்பினர். இல்லை, கார்வர் இறக்கவில்லை. வரண்ட நிலங்கள் பல கார்வரால் வளமுடையதாக்கப் பட்டன. அவற்றில் பசும்பயிர் தவழும்போது, கார்வரின் புன்னகை தவழும் முகத்தை அந் நாட்டு உழவர் இன்றும் பார்க்கின்றனர்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/193
Appearance