192 இரண்டு விளைச்சல்; மூன்று நான்கு பங்கு அதிக அறுவடை; அச்சமயங்களில் கார்வரின் அறிவின் முதிர்ச்சியை அன்பின் மிகுதியை உழவர்கள் உணர்கின்றனர். 1943 ஜூலையில் கூடிய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சபையில், கார்வர் நினைவுச்சின்னம், அவர் பிறந்த இடத்தில் அமைப்பதென்று முடிவு செய்யப்பட்டது. குழவியாக - அடிமையாக - அவர் மண்ணைத் தொட்டார். தந்தை இறந்தார். தாய் பிரிக்கப்பட்டாள். தாய் தந்தை யாரென்று தெரியாத, பெற்றோர் அன்பைப் பெறாத இளமைப் பருவம், கல்வி கற்பதில் பட்ட கஷ்டங்கள், ஆராய்ச்சி நடத்த முன்வந்த பொழுது இருந்த வசதிக் குறைவுகள், இவைகளைத் தாங்கிக் கொண்டுதான் நீக்ரோ ஒருவரால் கார்வராக வரமுடிந்தது. கைம்மாறு கருதாது உலகுக்கு உழைத்த உத்தமர்களில் கார்வரும் ஒருவர். அவருடைய பெயர் நிலைபெற்று விட்டது. சூழ்ந்திருந்த ஏழை உழவரிடம் அவர் காட்டிய அன்பு மறக்க முடியாதது. அவருடைய உழைப்பு அழியாச் சின்னமாகி விட்டது.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/194
Appearance