உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. ஈராசுப் பாதிரியார் அறியா வண்ணம், உலகு பன்னெடுங்காலமாக அறியாமை இருளிலே புதையுண்டு கிடந்த திராவிட வரலாறு - நாகரிகம் - பண்பாடு - மொழி ஆகியவற்றைத் தம் ஆராய்ச்சியொளி மூலம் அவனி முழுவதற்கும் விளக்கிக் காட்டி, அவற்றின் முதன்மை - தொன்மை - பெருமை - புகழ் ஆகியவற்றை உலகுக்கு எடுத்து விளம்பிய அறிஞர் பெருமக்களின் முன்வரிசையில், முதல்வராக வைத்து எண்ணப்படத்தக்கவர், ஈராசுப் பாதிரியார் ஆவார். ஈராசுப் பாதிரியார் சுபெயின் (Spain) நாட்டில் பிறந்து, வளர்ந்து. பாதிரியார் கோலம் பூண்டு, சமயத் தொண்டு புரிய இந்தியத் துணைக்கண்டம் வந்தவராவார். அவர் சமயத் துறையைக் காட்டிலும், வரலாற்றுத் துறையில்தான் மிகவாக இறங்கிப் பணிபுரிந்தார். அவரது தொண்டுகள் வரலாற்றுத் துறையில்தான் சிறந்து ஓங்கி உயர்ந்து காணப்பட்டன. அவர் சமயக் கருத்துக்களைப் பரப்பிடும் பாதிரியாராக அமைந்திருந்த போதிலும், பொதுவாக இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் - குறிப்பாகத் திராவிடர் வரலாற்றில், புதிய ஆராய்ச்சிக் கருத்துக்களோடு ஒளி நிறைந்த பக்கங்களைச் சேர்த்தவர் என்ற முறையில், ஈராசுப் பாதிரியார், திராவிட இன மக்களால் என்றென்றும் போற்றிப் புகழத்தக்கவரே யாவார். "மாற்றான் தோட்டத்து மல்லிகைப்பூ" ஆனாலும், அதன் மணத்தைப்