உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 போற்ற நாம் மறுக்கமாட்டோம்" என்று அறிஞர் அண்ணா அவர்கள் அறிவுரை கூறியுள்ளதற்கு ஒப்ப, ஈராசுப் பாதிரியாரின் சமயக் கருத்துக்கள் சிலவற்றிலே மாறுபாடுடைய போக்கைக் கொண்டுள்ள நாம், அவரது மணங்கமழும் வரலாற்று ஆராய்ச்சிக் கருத்துக்களைப் போற்றிப் புகழவே செய்கிறோம். அவர் பம்பாயிலுள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கூடத்தோடு (Indian Historical Research Institute) பல்லாண்டுக் காலம் தொடர்பு கொண்டு வரலாற்றுத் துறை யிற் பணிபல புரிந்தார். அவர் செய்த ஆராய்ச்சிகளிலே தலைசிறந்ததாக வைத்து எண்ணப்படுவது, மொகெஞ் சொதரோ - அரப்பா போன்ற மறைந்த சிந்துவெளி நகரங் களின் நாகரிகம், எத்தகைய நாகரிகம் என்பதை உலகுக்கு எடுத்து விளக்கிக் காட்டியதாகும். 1921 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிந்துவெளியில் மொகெஞ்சொதரோ - அரப்பா - சான்குதரோ போன்ற பல மண்மேடிட்ட நகரங்கள், இந்தியப் புதைப்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் அகழ்ந்து காணப்பட்டன. அகழ்ந்து காணப்பட்ட நகரமைப்பு - கட்டிட அமைப்பு- சாலை அமைப்பு - பழக்கத்தில் கொண்டிருந்த பொருள்கள் - புதுமைகள் - விளையாட்டுப் பொருள்கள் - கல்வெட்டுக் கள் - முத்திரைகள்- - எலும்புக்கூடுகள் போன்ற பலவற்றை யும் வைத்துக்கொண்டு பல்வேறு வரலாற்று அறிஞர்களும் ஆராய்ச்சி நடத்தினர்.அவர்களில் முக்கியமாக குறிப் பிடப்பட வேண்டியவர் இந்தியப் புதைப்பொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கிய சர் சான் மார்சல் (Sir John Marshall) என்பவர் ஆவார். அவர் 1935ஆம் ஆண்டில் 'மொகெஞ்சொதரோவும் சிந்து நாகரிகமும்' (Mohenjodaro and the Indus Civilization) என்னும் ஒரு நூலை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி வெளியிட்டார். அந்த நாட்களில், இந்திய வரலாற்றுத்துறை. ஆரிய நாகரிகத்திற்கு எல்லாவகையிலும் உயர்வளிக்க வேண்டும்