உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 195 என்னும் விருப்பமுடையோர் கைகளில் பெரும்பாலும் சிக்கிக் கிடந்த நால், இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்களும், அவர் சொல்வழி மயங்கிநின்ற மேனாட்டைச் சேர்ந்த வரலாற்று அறிஞர்களும், மறைந்த சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என்று நிலைநாட்ட அரும்பாடு பட்டனர். அவர்கள் பொருந்தாத சான்றுகளை வைத்துக் கொண்டு போலித்தன்மையில் பொருத்திப் பார்த்தார்கள். எல்லாம் நிலைநிற்க முடியாமல் சரிந்து வீழ்ந்தன. ஆராய்ச்சித் திறனும், கூர்மதியும், நடுநிலைத்தன்மையும் கொண்ட சர் சான் மார்சல் "மறைந்த சிந்துவெளி நாகரிகத்தின் அடிப்படையாளர்கள் அறவே ஆரியர்களாக இருக்கமுடியாது" என்னும் கருத்தை, அசைக்கமுடியாத தக்க காரணங்களோடு தம் நூலில் விளக்கிக் காட்டினார். சிந்து வெளி நாகரிகம் ஆரிய நாகரிகமாக இருக்கமுடியாது என்னும்போது, அது வேறு எந்த நாகரிகத்தைச் சேர்ந்த தாக இருக்கமுடியும் என்ற ஆராய்ச்சியில் ஈராசுப் பாதிரியார் நெடிதுநாள் இறங்கித் தக்க சான்றுகளைத் துருவித்துருவி எடுத்து, இறுதியில் அது திராவிட நாகரிகமே என்ற முடிவுக்கு வந்து, 1936 ஆம் ஆண்டில் அந்தக் கருத்தைக் காரணகாரிய விளக்கத்தோடு வெளியிட்டார். அவரது அந்தக் கருத்து திராவிடரின் வரலாற்றுக்குப் புதியதொரு ஒளியையும்,பொலிவையும் தருவதாக அமைந்தது. ஈராசுப் பாதிரியாரின் அந்தக் கருத்தை எவராலும் அவ்வளவு எளிதாக எதிர்க்க முடியவில்லை. அவரது கருத்துக்கு ஆதரவுதரும் ஆராய்ச்சிக் கருத்துக்களே பல்வேறு வரலாற்று அறிஞர்களிடத்திலிருந்தும் மேன்மேலும் வரத்தொடங்கின. திராவிட நாகரிகத்திற்கு உயர்வு ஏற்படுவதைக் காணப் பொறாத, சில நடுநிலைமை தவறிய, அழுக்காறு எண்ணங் கொண்ட வரலாற்றாசிரியர்கள் ஏதேதோ. மறுப்புக் காரணம் சொல்லி, ஈராசுப் பாதிரியாருக்கு எதிராக மழுப்பிப் பார்த்தனர். அவர்களது கூற்றுக்கள் இறுதியில் வலுவிழந்து வீழ்ந்தன; ஈராசுப் பாதிரியாரின் கருத்தே நிலைநின்றது.