196 சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் அல்லாத ஒரு நாகரிகம் என்பது மட்டுமல்லாமல், அது முழுக்கமுழுக்கத் திராவிட நாகரிகமே ஆகும் என்பதையும், அத்தகைய திராவிட நாகரிகமே இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது என்பதையும், அந்த நாகரிகந்தான் மேற்கே பரவிய எல்லா நாகரிகங் களுக்கும் அடிப்படையாக விளங்கிற்று என்பதையும், இந்தியத் துணைக்கண்ட நாகரிகத்திற்கும் சரி, உலக நாகரிகத்திற்கும் சரி, திராவிடந்தான் தொட்டிலாகக் காட்சி யளித்தது என்பதையும், தெள்ளத்தெளிய உலகுக்கு எடுத்துக் காட்டிய பெருமை அனைத்தும் ஈராசுப் பாதிரியாரையே சாரும். அவர் தம்முடைய கருத்தை வலியுறுத்திச் சொற்பொழிவுகள் வாயிலாகவும், நூல்கள் வாயிலாகவும். இதழ்கள் வாயிலாகவும் நாட்டுமக்களுக்கு எடுத்துரைத்து வந்தார். அவரை நேரில் காணும் வாய்ப்பும், அவருடைய அரிய சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பும் எனக்கு ஒருமுறை ஏற்பட்டது. நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மூன்றாவது ஆனர்சு குைப்பில் பயின்றுகொண்டிருக்குங் காலை, 1942ஆம் ஆண்டில், ஈராசுப் பாதிரியார் சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திற்கு வந்தார். அவர் மூன்று நாட்கள் தொடர்ந்து சொற் பொழிவு ஆற்றினார். அவர் சொற்பொழிவு ஆற்ற எடுத்துக்கொண்ட தலைப்பு "சிந்துவெளி நாகரிகம்" என்ப தாகும். அவரது தோற்றமே கவர்ச்சிகரமாக இருந்தது; அவரது சொற்பொழிவு அதைவிடக் கவர்ச்சிகரமாக இருந்தது. குள்ள உருவம், பருத்த உடல், பரந்த முகம், விரிந்த நெற்றி, வெண்மை நிறம், பெரிய கண்கள், எடுப்பான மூக்கு, அதன் மேல் கண்ணாடி, வெள்ளை அங்கி, வெள்ளிய நீண்ட அழகான தாடி ஆகிய இவற்றோடு கூடியதுதான் அவரது தோற்றம். ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அப்பொழுது அவரது
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/198
Appearance